யாழ்ப்பாணம் கண்டி வீதியூடாக இருபது லொறிகளில் பொருட்கள் எடுத்துவரப்படுவதாக யாழ். செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த லொறிகளில் மருந்துப் பொருட்கள் சீமெந்து, அஸ்பெய்டஸ் சீற், இரும்புக் கம்பிகள், நீரிறைக்கும் இயந்திரங்கள், கம்பளி உற்பத்திப் பொருட்கள் ஆகியன எடுத்துவரப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவை நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணம் வந்து சேருமென எதிர்பார்க்கப்பட்டபோதும் வந்து சேரவில்லை. பொருட்களை ஏற்றிவரும் லொறிகளில் யாழ்.மாவட்ட விளை பொருட்களான வெங்காயம், புகையிலை, பீற்ட், பனை உற்பத்திப் பொருட்கள் கொழும்புக்கு எடுத்துச் செல்லப்பட்வுள்ளன.