வடக் கிலிருந்து இடம்பெயர்ந்தோருக்குத் தேவையான அத்தியவசிய உதவிகளை வழங்குவதற்காக அமெரிக்க அரசாங்கம் முதற்கட்டமாக 21 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்கவுள்ளதாக சேவையிலிருந்து ஓய்வுபெறும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் பிளேக் தெரிவித்தார்.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பதவியிலிருந்து தான் ஓய்வு பெறுவதை முன்னிட்டு கொழும்பு, கோல்பேஸ் ஹேட்டலில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தோரை இவ்வருட இறுதிக்குள் அங்கு மீள்குடியமர்த்துவற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா தன்னாலான உதவிகளை தொடர்ந்தும் வழங்கும் என்றும் ரொபர்ட் பிளேக் அங்கு மேலும் குறிப்பிட்டார்.