இந்திய தூதுக்குழு – ஜனாதிபதி சந்திப்பு

menon-narayan.jpgஇலங் கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய தூதுக் குழு இன்று முற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து உரையாடியது. இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதாபிமான நடவடிக்கைகளின் கீழான மீள் குடியேற்றம் புனரமைப்பு மற்றும் புனர் நிமாணப் பணிகளுக்கு உதவ இந்தியா பாரிய அளவில் ஆர்வம் காண்பித்து வருகிறது.

அதனடிப்படையில் விசேட தூதுக் குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்பி  வைத்துள்ளது.

இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ஷிவ ஷங்கர் மேனன் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் ஆகியோர் இத்தூதுக் குழுவில் இடம்பெறுகின்றனர். ஜனாதிபதியின் விசேட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பஸில் ராஜபக்ஷவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார். 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • thevi
    thevi

    இலங்கை இவ்வளவு நாளும் இந்தியாவிடம் ஓடியது. இனி இந்தியா இலங்கையிடம் ஒடிககொண்டிருக்க வேண்டுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    Reply