பயங்கரவாதத்தை ஒழிக்கும் வகையில் மேற்கொண்ட தலைமைத்துவத்திற்காக வியட்னாம் பிரதமர் தமது பாராட்டுதல்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தெரிவித்துள்ளார். அத்துடன், தொடர்ந்தும் இலங்கைக்கு உதவுவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
இரு நாடுகளினதும் நீண்டநாள் நட்புறவு குறித்தும் கருத்துத் தெரிவித்த வியட்னாம் பிரதமர், எதிர்வரும் வருடங்களில் இது மேலும் வலுவடையுமென்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை – வியட்னாம் ஆணைக்குழுவை விரைவில் கூட்ட வேண்டு மென்றும் அவர் பிரேரித்துள்ளார். அவரின் இந்த யோசனையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.