பிரபாகரன் மரண செய்தி: வெளிநாடுகளில் தமிழர்கள் கொந்தளிப்பு

Pirabakaran_V விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் முன்னணி தளபதிகள் அனைவரையும் கொன்று விட்டதாக இலங்கை அரசு அறிவித்து உள்ளது.
 
இது உலகம் முழுவதும் தமிழர்களை கொந்தளிக்க செய்துள்ளது. இலங்கையில் இருந்து அகதிகளாக சென்ற தமிழர்கள் பல்வேறு நாடுகளில் உள்ளனர். அவர்கள் தெருவில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
லண்டனில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு வந்து பாராளுமன்றம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், தமிழர்களுக்கும் இடையே மோதல் நடந்தது.
 
சுவிட்சர்லாந்தில் ஐ.நா. சபை அலுவலகம் எதிரே ஏராளமான தமிழர்கள் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸ் காவலை மீறி உள்ளே நுழைய முயன்றனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
 
அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை முன்பும் போராட்டம் நடந்தது. இதில் தமிழர்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டனர்.  இதேபோல பிரான்சு, கனடா, ஜெர்மனி, ஆஸ்தி ரேலியா, நெதர்லாந்து, நார்வே ஆகிய நாடுகளில் தமிழர்கள் தெருக்களில் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
அனைத்து இடங்களிலும் பெண்கள், குழந்தைகள் என குடும்பத்தோடு கூடி இருந்தனர். அவர்களில் பலர் கதறி அழுதனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மிகவும் ஆவேசத்துடன் காணப்பட்டனர். அவர்கள் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடலாம் என கருதி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அனைத்து நாடுகளிலும் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • Raj
    Raj

    தமிழர் தீர்வு தமிழர் பாதுகாப்பு தொடர்பாக புலன்பெயர் புண்ணாக்குகள் இதுவரை சரியான எதனையும் முன்னெடுக்கவில்லை என்பதுடன் போரைநம்பி வியாபாரம் நடத்தும் கூட்டத்தினரின் கபடத்திட்டத்தில் ஏமாந்தும்/ஏமாந்துகொண்டுமேயுள்ளனர் என்பதே தற்போதைய நிகழ்வுகள் காட்டுகின்றன.புலிகளைக்காக்கும் நோக்குடன் தொடங்கிய கூத்துகள் கடைசியில் அவர்களையே துடைத்தழிக்க உதவியுள்ளது என்பதே நிதர்சனம். கிளிநொச்சியுடனாவது புலிகளுக்கு ஓர் காத்திரமான அழுத்தம் பிரயோகிக்கப்பட்டிருந்தால் தலைவரை விட வேறு எவ்வளவோ பெறுமதியான உயிர்களைக் காத்திருக்கமுடியும்.இந்த வல்லமை புலம்பெயர்ந்தவர்களிடமுள்ள கடிவாளக்கயிறாகிய பணம் மட்டுமேயாகும். அண்மையக்காலத்து புலிக்கொடிப் போராட்டங்கள் எதையுமே சாதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டினை உறுதிசெய்வதுடன் வரலாற்றுத்தவறாகவும் பதிவாகியுள்ளது. இன்று தமிழருக்கு எதுவுமே கிடைக்காது என்ற ஐயத்திலேயேயும் போர் வியாபாரிகளின் இருப்புக்குமே தொடர்ந்து போலிப்பிரச்சாரங்களுடன் இன்னுமோர் தவறிழைக்க முற்படுகின்றனர் என்பதே என்னுடைய பார்வையாகும்.நாம் இப்போதுள்ள அனுதாபத்தை வைத்துக்கொண்டு ஜனாதிபதியுடன் ஒத்துழைத்து எதையாவது வென்றெடுப்பதே புத்திக்கூர்மையாகும்.

    Reply
  • theivagopal
    theivagopal

    unexpected dead.you can also see on his face and his eyes tells you something happend unexpectedly.may be forces offer him life,he might have arrested before hand and he might have made negoations and forces may play a game with him,some one shoot him and he dead.

    Reply