இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். சென்டிரல் மெமோரியல் ஹால் அருகே நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத்தினர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் ஏராளமாக கலந்து கொண்டனர்.
திருமாவளவன் எம்.பி., திராவிடர் இயக்க தமிழர் பேரவை அமைப்பாளர் சுப.வீரபாண்டியன், இரா. ஜனார்த்தனம் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் ராஜபக்சேயை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். போராளிகள் புதைக்கப்படுவது இல்லை. விதைக்கப்படுகிறார்கள், வீர வண்ணம் வீர வணக்கம்… போரில் வீழ்ந்த ஈழத்தமிழர்களுக்கு வீர வணக்கம் என்பது போன்ற கோஷங்களை எழுப்பினார்கள்.
ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் இலங்கை தமிழர்களுக்காக கடைசி மூச்சு இருக்கும் வரை போராடுபவர். அவர் இறந்ததாக பல தடவை கூறி உள்ளார்கள். ஆனால் மீண்டும் உயிரோடு வந்து யுத்த களத்தில் போராடி இருக்கிறார். அது போலத்தான் இப்போதும் பிரபாகரன் கொல்லப்படவில்லை. அவர் இறந்து விட்டதாக வதந்தியை பரப்புகிறார்கள்.
jagan
hi tamil peoples…realy i m disapointed.bcoz the death news of leader prabhakaran…inimelum indian govt take a immediate action for lankan president….
மாயா
திருமா போன்றவர்களை நம்பியதால் வந்த வினை. இனியும் இவர்களை நம்பாதீர்கள். ராஜபக்ஸவை நம்புங்கள் . அதுதான் இன்றைய விடிவுக்கு வழி.
ramesh
தேர்தலுக்கு முன்பு திருமாவளவன் இப்படிக் கூறியிருந்தால், இவர் தேர்தலில் நிட்சயம் தோற்றிருப்பார்.
msri
இப்பவல்ல!> ஏற்கனவே அரசபயங்கரவாதியும்+சர்வதேச குற்றவாளியும்தான்!
thurai
சாதி, சமய, இன, மொழி, உணர்வுகளைத் தூண்டி தலைவராவதும், அதன் பின் தன் குடும்பத்தை வளம் படுத்துவதும்,தமிழனை எதிரி அழிக்காமல் தன்னைத்தானே அழிக்கவே வழி வகுக்கும்.
துரை
நண்பன்
//msri on May 19, 2009 3:22 pm இப்பவல்ல!> ஏற்கனவே அரசபயங்கரவாதியும்+சர்வதேச குற்றவாளியும்தான்!//
“பயங்கரவாதம் என்பதில் நல்லது கெட்டது என்று இரண்டு இல்லை” என்றவர் மகிந்த. அரச பயங்கரவாதத்தைப் பற்றி புலிப் பயங்கரவாதம் பேச முடியாது. இரு சாராரும் தராசில் போட்டால் சரி சமன்தான்.