ஐ.நா. செயலர் பான் கீ மூன் 22ஆம் திகதி கொழும்பு வருகிறார்

ban_ki_moon_.jpgஐ.நா. செயலாளர் பான் கீ மூன் எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பையேற்றே ஐ.நா. செயலர் 22 ஆம் திகதி கொழும்பு வருவதாக வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

பான் கீ மூனின் பிரதிநிதியாக கொழும்பு வந்துள்ள விஜே நம்பியாரை நேற்று திங்கட்கிழமை போகொல்லாகம சந்தித்த போதே விஜே நம்பியார் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழித்த படையினரின் வெற்றி நாளாக 22 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில் அன்றைய தினம் பான் கீ மூன் இலங்கை வரவுள்ளார்.

இதற்கிடையில், வன்னியில் அண்மைக்காலமாக படையினர் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையானது மனிதாபிமான நடவடிக்கையெனவும் இந்த மனித நேயப் பணியின் வெற்றியை அங்கீகரிக்குமாறும் ஐ.நா. சபையிடம் இலங்கை அரசு கேட்டுள்ளது.

விஜே நம்பியாருடனான சந்திப்பிலேயே அமைச்சர் போகொல்லாகம இதனைக் கேட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • kosompo
    kosompo

    ஏன்வருகிறார்? சிங்களவர் வெடிகொழுத்திக் கொண்டாடினார்கள். இவர் தண்ணியடித்துக்கொண்டாப் போகிறாரோ? நீரும் ஐ.நா (ஐக்கியமான நாசகாரர்கள்) சேர்த்து மக்களைக் காப்பாற்றியிருக்கலாம் தானே. இனி எவ்வளவு நீலிக்கண்ணீர் விடப்போகிறார்கள் மக்களே பாருங்கள். வீரோ பவர் என்று 5நாடுகளுக்குள் அடிமையாகிப்போன அருவெருப்பான கூட்டம்தான் இது

    Reply
  • palli.
    palli.

    தமிழ் சினிமாவில் வரும் பொலிஸாரின் நினைவுதான் வருகிறது.

    Reply