இலங்கையின் உள்விவகாரங்களில் பிரிட்டன் தலையிடக் கூடாது எனத்தெரிவித்து கொழும்பிலுள்ள பிரிட்டன் உயர்ஸ்தானிகராலயம் முன்பாக இன்று திங்கட்கிழமை காலை ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதில் 1000 இற்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.
கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் முன்பாக இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தூதுராதலய அலுவலகத்தை கற்கலால் தாக்கியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் உள்விவகாரங்களில் பிரித்தானியா வீணாக தலையிடுவதாகக் கூறி இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரித்தானிய அரசாங்கத்திற்கு எதிராக கோஷமெழுப்பியதோடு கொடும்பாவிகளையும் எரித்தனர். இதைத் தொடர்ந்தும் தூதுராலயத்தின் இலச்சினை கழற்றப்பட்டு தீ வைக்கப்பட்டதோடு, கல்லால் அலுவலகம் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

msri
இந்த அளவிற்கு> மகிந்தப் பேரினவாத அரசின்>இனவாத-நிறவாத-திமிர் அரசியல் உள்ளது! இதனாலேயே சர்வதேசம் உங்களை நோக்கி சுட்டு விரல் நீட்டுகின்றது! இதற்கு கல் எறிவது கண்ணாடி உடைப்பது குரங்குச் சேட்டையே!
kumar
அப்போ நீங்க வெளிநாடுகளில இலங்கைத் தூதரகங்களில செய்யிறது…………?
chandran.raja
முப்பது வருடகாலமாக குரங்குசேட்டை விட்டவர்கள் தமிழ் பயங்கரவாதிகளே! இந்த பயங்கரவாதிகளை வளர்த்து வாழ்த்தி வழிவிட்டவர் புலம்பெயர் தமிழ்மக்களே உண்மையான ஆய்வில் ஈழமக்களின் இவ்வளவு பெரும் தொகையான உயிர் பொருள் அழிவுகளுக்கும் இடப்பெயருக்கும் பொறுப்பு எடுக்க வேண்டியவர்கள் புலம் தமிழ்மக்களே இல்லாவிட்டால் இந்த பயங்கரவாதம் அசுரத்தனமாக வளர்ந்திருக்க முடியாது. எம்மினத்தை நாமே முதலில் திருத்திக்கொள்ள வேண்டும். தமிழ்மக்களை ராஜயபக்சா விடுதலை செய்து விட்டிருக்கிறார். விரலை சுட்டிக்காட்டுவது என்னவோ! உண்மைதான். அது யார்? முன்றாம் உலக நாடுகளின் யுத்தம் அவலங்களில் சீர்ரளிவுகளில் ஆதாயம் தேடும்கூட்டம். அது முதலாளித்துவமா? அல்லது வேறு ஒன்று இருக்க முடியுமா?.
மாயா
//msri on May 18, 2009 8:32 am இந்த அளவிற்கு> மகிந்தப் பேரினவாத அரசின்>இனவாத-நிறவாத-திமிர் அரசியல் உள்ளது! இதனாலேயே சர்வதேசம் உங்களை நோக்கி சுட்டு விரல் நீட்டுகின்றது! இதற்கு கல் எறிவது கண்ணாடி உடைப்பது குரங்குச் சேட்டையே!//
அவன் தனது நாட்டில் அன்னியனுக்கு எதிராக போராடுகிறான். அது எம் பார்வையில் சரியில்லை என்றாலும் , அதற்கான உரிமை அவனுக்கு உண்டு.
ஆனால் புலம் பெயர் தமிழன், அவனை வாழ இடம் கொடுத்த நாட்டையே நாறடிக்கிறார்கள்? வேக வீதிகளிலும் , புகையிரதத வீதிகளிலும் …………… எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாமும் தொடர்ந்து அசெளகரியங்களை உருவாக்குகிறார்கள். இங்கிருக்கும் தூதரங்களை தாக்குகிறார்கள். இந்நாட்டு மக்கள் வெறுக்கும் அளவுக்கு செய்கிறார்கள். அந்த சேட்டை தெரியவில்லையா?
நீங்கள் செய்வதெல்லாம் சரி. அடுத்தவன் செய்வவதெல்லாம் தவறு? நல்ல நீதி?
msri
குமார்+சந்திராஐ;+மாயா+போன்றோர்> புலிகளின் புலம்பெயர்வுகள்> புலம்பெயர் நாடுகளில் உள்ள தூதுவராலயங்களைத் தாக்கியபோதில்: நான் எழுதிய பின்னூட்டங்களை வாசிக்க இல்லைப்போலும்! புலத்திலும் புலம்பெயர்விலும்சரி தூதுவராலயங்களிற்கு முன்னால் போராடுவதில் தவறில்லை எப்படிப் போராடுவது என்பதே கேள்வி கதவு கண்ணாடியை உடைப்பது குரங்கின் சேட்டையே!
accu
பலவந்தமாக மக்களை மன்னாரில் தொடங்கி விரட்டிச் சென்று தங்கள் உயிர்களைப் பாதுகாக்கும் கேடயமாக்கி தப்பமுயன்ற அப்பாவி மக்களை ஈவுஇரக்கமின்றி சுட்டுத்தள்ளியபோதும், அதை உலகநாடுகளும் மனிதாபிமான அமைப்புக்களும் பகிரங்கப்படுத்தியபோதும் அதற்க்கெதிராக ஒரு வார்த்தையேனும் புலிகளைக் கேட்பதற்க்கு வக்கில்லாமல் புலிக்கொடிகளை காவிக்கொண்டு சந்திக்கு சந்தி நின்று குரங்காட்டம் ஆடியவர்கள் இவ்வளவு அழிவும் தோல்வியும் வந்தபின்பும் வாலைச்சுருட்டிக்கொண்டு குடங்காமல் இன்னும் வெக்கமில்லாமல் அறிக்கைகள் விடுவதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.