இலங்கையில் மக்கள் இரத்தம் சிந்துவதை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியாக ஐ.நா. தலைமைச் செயலர் பான் கீ மூன் தனது மூத்த அலுவலர் ஒருவரை இலங்கைக்கு அனுப்பியுள்ளார். தலைமைச் செயலர் அலுவலகத்தின் தலைமை அதிகாரியான விஜய் நம்பியார் மீண்டும் இலங்கை செல்கிறார்.
மோதலில் சிக்குண்டுள்ள பொதுமக்களின் நிலைமை குறித்து அச்சங்கள் அதிகரித்துவரும் நிலையில், மனிதாபிமான நெருக்கடியைத் தீர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இலங்கை அரசுடன் அவர் பேச்சு நடத்தவுள்ளார்.
ஒரு மாதம் முன்னர், நம்பியார் அவர்கள் இலங்கை வந்து ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்களை சந்தித்து திரும்பிய பின்னர், யுத்தப் பிரதேசத்திற்குள் ஐ.நா.செயலணிக் குழு செல்ல இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் அது நடக்கவில்லை என பீபீஸி இணையம் தெரிவித்துள்ளது