முகத்தில் கரியைப் பூசிய தேர்தல் – கருணாநிதி

karunanithi.jpgதேர்தல் நேரத்தில் ஆளுங்கட்சி வன்முறையில் ஈடுபடப் போகிறது என்றும், பெரிய கலவரம் ஏற்படப் போகிறது என்றும் தமிழ்நாடே ஸ்தம்பிக்கப் போகிறது என்றும் சிலர் பிரசாரம் செய்தார்கள். தமிழ்நாடே ரத்தக் களறியாகப் போகிறது என்று பிரசாரம் செய்தவர்களின் முகத்தில் கரி பூசும் அளவிற்கு தேர்தல் அமைதியாக நடைபெற்றுள்ளது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி .இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை
:
மக்களவை தேர்தல் ஒன்றிரண்டு சிறு சம்பவங்களை தவிர அமைதியாக நடந்து முடிந்துள்ளது என்று தேர்தல் ஆணையமே அறிவித்துள்ளது. 68 சதவிகிதம் வாக்குப் பதிவுகள் நடந்துள்ளது. வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு என்று ஒரு சில இடங்களில் செய்திகள் வந்த போதிலும், சிறிது நேரத்திற்குள் சரி செய்யப்பட்டு விட்டது. அந்த சிறு கோளாறுகள்கூட தேர்தல் ஆணையத்தின் பொறுப்பே தவிர, அதற்கும் அரசுக்கும் சம்பந்தம் இல்லை.

ஆனால் சில நாட்களாக தேர்தல் நேரத்தில் ஆளுங்கட்சி வன்முறையில் ஈடுபடப் போகிறது என்றும், பெரிய கலவரம் ஏற்படப் போகிறது என்றும் தமிழ்நாடே ஸ்தம்பிக்கப் போகிறது என்றும் சிலர் பிரசாரம் செய்தார்கள். தமிழ்நாடே ரத்தக் களறியாகப் போகிறது என்று பிரசாரம் செய்தவர்களின் முகத்தில் கரி பூசும் அளவிற்கு தேர்தல் அமைதியாக நடைபெற்றுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • chandran.raja
    chandran.raja

    வாஸ்தவம் தான்.செல்வி போட்ட துருப்பு சீட்டில் //ஈழத்தமிழருக்கு 10.000 கோடி ரூபா மானியம். இராணுவத்தை அனுப்பி தனிஈழம் எடுத்துக்கொடுப்பேன் மத்தியயரசு நான் சொல்வதைக் கேட்டால் (?)இருந்தது ஏழுமணிதியாலம் உண்னாவிதரம் இல்லை காலையிலே ஒன்பதுக்கு முதல் சாப்பாடு என்றால் இருந்தது மூன்னுமணித்தியாலம் தான்//

    இப்படி சீட்டாடத்திலே ஜெயிச்சுட்டா என நினைக்கிறோம்.மறுபடியும் சீட்டை கலைச் சுப்போட்டு ஆடுங்க…நாமபாதுக்கிட்டே இருக்கோமுங்க!!!

    Reply
  • palli.
    palli.

    ஜயா தமிழக தமிழரை விட.
    இந்திய மக்களை விட.
    உலக அறிவு ஜீவிகளை விட.
    அயல்நாடான சீனாவை விட.
    பங்காளிநாடான பாகிஸ்த்தானை விட.
    ஈழ தமிழரை விட.
    இந்திய பிரதமருக்கான தேர்த்தலை கண்விழித்து எதிர்பார்ப்பது புலிகளூம் அவர்கள் பினாமிகளும்தான். ஏதோ இந்திய அரசு மாறிவிட்டால் பெட்டி கடையில் பட்டாணி வேண்டுவது போல் ஈழம் வேண்டி வேலுபிள்ளையிடம் கொடுத்து விடுவது போல் ஒரு கற்பனை வாழ்க்கயில் இருக்கிறார்கள்.
    இதை பார்த்தால் புடவைகடையில் சென்று மீன் கேட்ப்பது போல் உள்ளது. எதுக்கும் தாங்கள் பரசத்திக்கே பரவசமாக கதை எழுதியவர். இந்த சலசலப்புக்கு எல்லாம் பயப்பிடாமல் தாங்கள் சொல்லியது போல் கடலில் தூக்கி போட்டு விட்டால்(தேர்தலில் தோற்றால்) கட்டுமரமாய் தமிழருக்காய் செயல் படுங்கள் (சேவையை தொடருங்கள் குடும்ப சேவையை அவர்களும் தமிழர்தானே)

    Reply