வன்னியில் இருந்து யாழ்ப்பாணம் வந்து கைதடி, ஆதரவற்ற சிறுவர் இல்லம், கைதடி சித்த ஆயுர்வேதக் கல்லூரி விடுதி, பனை அபிவிருத்திச்சபை ஆராய்ச்சி நிலையங்களில் தங்கிவாழும் சிறார்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் பதினெட்டாம் திகதி ஆரம்பமாகவுள்ளன. இச்சிறார்களுக்கான கல்விச் செயல்பாடுகளை ஆரம்பிக்க சிறுவர் நிதியம், யுனிசெவ் ஆகியன இந் நிலையங்களுக்கு அருகில் தற்காலிக வகுப்பறைக் கட்டிடங்களை நிர்மாணித்துக் கொடுத்துள்ளன.
நலன்புரி நிலையங்களிலுள்ள ஆசிரியர்கள் இச்சிறார்களுக்கான கற்பித்தலில் ஈடுபடுவர். தென்மராட்சிக் கல்வி வலயம் இச் சிறார்களுக்கான பாட நூல்களையும், யுனிசெவ் இவர்களுக்கான சீருடை, கல்வி உபகரணங்களையும் வழங்கவுள்ளன.