மலேசியத் தமிழர்கள் சம உரிமை கோரி போராட்டம் செய்துவருகின்றனர் மலேசியாவில் சிறையில் இருந்து சனிக்கிழமை விடுவிக்கப்பட்ட இந்திய சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்கான போராடும் அமைப்பைச் சேர்ந்த பி.உதயகுமார், சிறுபான்மை மக்களின் உரிமைக்கான தனது போராட்டதை தொடர்ந்து முன்னெடுக்கப்போவதாக அமெரிக்க செயதி நிறுவனமான அசோசியோடட் பிரஸ்சுக்கு கூறியுள்ளார்.
இந்தப் போராட்டமானது தெருக்களில் நடைபெறாது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் மத சுதந்திரம், வேலைவாய்பின்மை மற்றும் கல்வி வாய்ப்புக்கள் போன்ற பிரச்சனைகளை அமைதியான முறையில் தீர்க்க தான் முயலப் போவதாக உதயகுமார் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு அங்கு நடைபெற்ற தேர்தலுக்கு முன்பாக 2007 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட உதயகுமாரும் இந்து உரிமை அமைப்பான ஹிண்டாராப்பின் மற்ற நான்கு உறுப்பினர்களும், இரண்டு ஆண்டுகள் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டடிருந்தனர்.
Thirumalaivasan
அதுசரி> லண்டனுக்குத் தப்பிவந்த வேதமூர்த்தி என்ன செய்கிறார். வெளிநாடகளில் ஹின்ட்ராப் பற்றிய நிலைமைகளை எடுத்துச் சொல்லவென வந்தவர் இங்கு 2007ம் ஆண்டு முதல் ஒர பத்திரிகையிலும் அதுபற்றி மூச்சுவிடவில்லையே. ஈழத்தமிழர்களுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடாது என்று அம்மிக்கொண்டு இருக்கிறார் போலும். அவரது நிலைப்பாட்டை தேசம் கண்டறிந்து சொல்லுமா?