இரானில் சிறையிடப்பட்டிருந்த இரானிய அமெரிக்க பத்திரிகையாளரான ரோக்ஸானா சபேரியின் தண்டனைக் காலம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால், எட்டு ஆண்டுகளிலிருந்து இரண்டு ஆண்டுகளாக குறைக்கப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டதை அடுத்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
விடுவிக்கப்பட்டதும் இரானை விட்டு வெளியேற அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறுகிறார் அவரது வழக்கறிஞர். மேலும் ஐந்து வருடங்களுக்கு அவர் இரானில் பத்திரிகையாளராக பணியாற்றக் கூடாது என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரானிய அமெரிக்க உறவுகளை சீராக்க அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முனைந்திருந்த நேரத்தில், இந்த வழக்கு இரு நாடுகளுக்கும் இடையில், பதற்ற நிலையை அதிகரித்தது என்று நிருபர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.