அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு புலிகளின் ஆக்கிரமிப்பிலிருந்து தப்பிவந்து புல்மோட்டை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த இடம்பெயர்ந்த மக்களின் ஒரு தொகுதியினர் நலன்புரி நிலையங்களுக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.
புல்மோட்டை பதின்மூன்றாம் கட்டையில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண கிராமத்திலுள்ள நலன்புரி நிலையங்களுக்கே இடம்பெயர்ந்தோர் நேற்றையதினம் பகல் மாற்றப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதன்போது 498 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 732 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இடமாற்றம் செய்யப்பட்டவர்களுக்கு கூடார இருப்பிடங்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.