அரசாங்கத் தடையை மீறி வெசாக் பண்டிகையின் போது சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த 900 பேர் கைது செய்யப்பட்டதாக கலால் திணைக்களம் தெரிவித்தது.
வெசாக் பண்டிகையை முன்னிட்டு கடந்த 8ஆம் 9ஆம் திகதிகளில் மதுபானக்கடைகள் மூடப்ப்ட வேண்டுமென உத்தரவிடப்பட்டதுடன் மதுபானம் விற்பனையை மேற்கொள்வதும் தடை செய்யப்பட்டிருந்தது.
வெசாக் பண்டிகையின் போது நடத்தப்பட்ட சுமார் 850 சுற்றிவளைப்புத் தேடுதல்களின் போதே இவர்கள் கைதானதாக கலால் திணைக்கள அதிகாரி ஒருவர் கூறினார். சட்டவிரோதமாக மதுபானம் விற்றவர்கள் சட்டவிரோதமாக மதுபானம் வைத்திருந்தவர்கள் மற்றும் மதுபானம் அருந்தியவர்கள் போன்றோரும் இதில் அடங்குவர். நாடு பூராவும் இந்தத் தேடுதல் நடத்தப்பட்டது.