மெய்பொருள் காணுமா யாழ் பல்கலைக்கழக அலுமினி அசோசியேசன் யுகெ ?

மெய்பொருள் காணுமா யாழ் பல்கலைக்கழக அலுமினி அசோசியேசன் யுகெ ?

1970 பதுக்களில் யாழில் பல்கலைக்கழகம் அமைவதற்கு எதிராக தமிழ் தேசியம் போர்க்கொடி தூக்கியது. தமிழரசுக் கட்சி யாழில் பல்கலைக்கழகம் உருவாவதை எதிர்த்தது. தமிழ் காங்கிரஸ் யாழில் இந்து பல்கலைக்கழகம் உருவாக வேண்டு; என்று கோரினர். ஆனால் பொன்னம்பலத்தின் குடும்பத்தில் யாரும் இந்துநாகரீகம் கற்கவில்லை. ஆனால் இப்போதும் தாங்கள் இந்துநாகரீகத்தை வளர்க்க யாழில் உள்ள ஜனாதிபதி மாளிகையை தருமாறு கோருகின்றனர். ஆனால் இந்துநாகரீகமும் கலைப்பீடத்தில் படித்தவர்களும் வேலை வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகின்றனர். அக்காலத்தில் இடதுசாரிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது சிறிலங்கா சுதந்திரக் கட்சி. ஆட்சியிலிருந்த இடதுசாரிகளின் தூண்டுதலால் 1974இல் உருவாக்கப்பட்டது தான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

அன்று யாழில் பல்கலைக்கழகம் உருவாவதற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய யாழ் தமிழ் தேசியம் தற்போது யாழ் பல்கலைக்கழகத்தை தனது கோட்டையாக்கியுள்ளது. காலங்கள் உருண்டோடி யாழ் பல்கலைக்கழகம் தனது 50 ஆண்டுகளை எட்டுகின்றது. பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது முதல் தமிழீழ விடுதலைப் போராட்டம் வீச்சுப் பெற்ற 1980க்களின் நடுப்பகுதி வரையான முதற் பத்து ஆண்டுகள் யாழ் பல்கலைக்கழகத்தில் இடதுசாரி – சோசலிச சிந்தனை வீச்சுப் பெற்றிருந்தது.

தற்போது யாழ்பாணத்துக்கு வெளியே, இலங்கைக்கு வேளியே சென்ற பல்கலைக்கழக பட்டதாரிகள் ஒன்று சேர்ந்து தாங்கள் தாங்கள் வாழும் நாடுகளில் அமைப்புகைள உருவாக்கி வருகின்றனர். அவ்வாறான ஒரு அமைப்பை பிரித்தானியாவில் அமைக்க பல முயற்சிகள் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட போதும் அது நீண்டகாலமாகக் கைகூடவில்லை. ஆனால் இந்த ஆண்டு அதில் அவர்கள்; வெற்றி பெற்று 1100 பேர்வரை கலந்துகொண்ட நிகழ்வை லண்டன் கிறிஸ்றல்பலஸில் கடந்த ஆண்டு நவம்பர் 30 இல் ஏற்பாடு செய்திருந்தது.

மண்டபம் செலவு 30,000 பவுண் உட்பட மொத்தமாக 44,000 பவுண் செலவில் இந்நிகழ்வு வெகு விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்களது வருமானம் 52,000 பவுண்களாகவும் செலவு போக 8,000 பவுண்கள் மிகுதியாகவும் கிடைத்துள்ளது.

யாழ் பல்கலைக்கழகத்தின் அலுமினி அசோசியேசன்ஸ் யுகெ கிறிஸ்ரல்பலஸில் நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்த போதே இந்தச் சங்கத்துக்குள்ளே குழப்பநிலை ஆரம்பமாகிவிட்டது. முதற் கோணல் முற்றும் கோணல் என்ற நிலையில் தற்போது யாழ் பல்கலைக்கழகத்தின் அலுமினி அசோசியேசன்ஸ் யுகெ உள்ளது. இது தொடர்பில் சாந்தி ரதுலோச்சனன் பதிவு செய்த குறிப்பு அங்குள்ள பிரச்சினையின் ஆழத்தை மிகத் தெளிவாகக் குறிப்பிடுவதாக உள்ளது. “ஒரு பெண் 01.10.24லிருந்து 29.12.24 வரை செய்த வீட்டுக்கு கூரை போட வந்துள்ளார்கள் சிவகுரு ஜெயானந்தன், புனிதா கணேஸ்வரன். ஒரு பழைய மாணவர்களுக்கும் அறிவிக்காது, தன்னைத் தலைவராக நினைத்து, யூலை 07, 2024 அன்று ஒரு வெளிநாட்டு நிறுவனத்துக்கு பொன் விழாவை தாரைவார்த்துக் கொடுத்தவர். இதைத் தவிர எந்த சமூகப் பணியிலும் ஈடுபடவில்லை”. யாழ் பல்கலையில் 1984-85 இல் பௌதீக விஞ்ஞான பீடத்தில் கற்ற இவர், தன்னோடு தலைமைப் பதவிக்கு போட்டியிட்டவர் தொடர்பில் பதிவிட்ட கருத்து.

யுகெ அலுமினி அசோசியேசன்ஸ் நவம்பரில் தங்களுடைய நிகழ்வை கொண்டாடுவதற்கு முன் அதற்கான விடயங்களை சிவகுரு ஜெயானந்தன் என்பவர் தன்னிச்சையாக மேற்கொண்டு செயற்பட்டார் என்று குற்றம்சாட்டப்படுகின்றது. இங்கு சாந்தினி குறிப்பிடும் வெளிநாட்டு நிறுவனம் லிஃப்ற் என்கின்ற அமைப்பு. ஜெயானந்தன் இந்த லிஃப்ற் என்ற அமைப்புடனும் நெருக்கமாக உள்ளார். யாழ் பல்கலைக்கழக யுகெ அலுமினி அசோசியேஸன்ஸை உருவாக்க சாந்தி ராகுலேஸ்வரன் போன்ற சிலர எண்ணிய போதும் அதனை நடைமுறைச்சாத்தியமாக்கியது லிஃப்ற் – LIFT என்ற அமைப்பே என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத சிவகுரு ஜெயானந்தனின் நண்பர். அமெரிக்காவில் இருந்து வந்து நின்ற மூவர் இந்நிகழ்வை அரங்கேற்ற முழுமுயற்சிகளையும் மேற்கொண்டுள்ளனர். ஆனால் அவர் தங்களுடைய நோக்கத்தை வெளிப்படையாகக் குறிப்பிடாமல், இந்த அலுமினி அசோசியேஸனை வைத்து லிஃப்ற் என்ற தங்களுடைய அமைப்புக்கு நிதி திரட்டும் முயற்சியை மறைமுகமாக மேற்கொண்டிருந்தனர். அதனையொட்டியே பிரச்சினை உருவானது.

ஆனால் தொடர்ச்சியாக லிஃப்ற் அமைப்புக்கு எதிராக யாழ் பல்கலைக்கழக அலுமினி அசோசியேசன்ஸைச் சேர்ந்த பலரும் கருத்துக்களை வெளியிட்டதும் அதில் நேர்மைத் தன்மை இல்லாததும் லிஃப்ற் அமைப்பு யூகே அலுமினி அசோசியேசன் யுகெ இலிருந்து ஒதுங்க நிர்ப்பந்திக்கப்பட்டது. நவம்பர் 30 கிடைத்த லாபத்தில் பங்கும் வழங்கப்பட வில்லை. ஆனாலும் இது தொடர்பில் தொடர்ந்தும் சந்தேகம் எழுப்பப்படுகின்றது. லிஃப்ற் அமைப்பின் சின்னம் பொறிக்கப்பட்ட சேர்ட்ஷடகள் அலுமினி அசோசியேசன்ஸ் சார்ந்த நிகழ்வில் விற்கப்பட்டது இந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தகின்றது. அத்தோடு லிஃப்ற் அமைப்பின் பிரதிநிதியாகக் கருதப்படும் சிவகுரு ஜெயானந்தன் தொடர்ந்தும் யாழ் பல்கைலக்கழக யூகெ அசோசியேசன்ஸ் தலைவராக இருப்பது முரண்பட்ட நலன்கள் கொண்ட செயற்பாடக பார்க்கப்படுகின்றது.

தற்போது யாழ் பல்கலைக்கழக அலுமினி அசோசியேசன்ஸ் யுகெ இன் யாப்பு விதிகளை அமைப்பதற்கு ஒரு குழு உருவாக்கப்பட்டு அக்குழு யாப்பு விதிகளை உருவாக்கி வருகின்றது. அந்த விடயம் யூன் 15 மட்டில் நிறைவடையும் என தேசம்நெற்க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி உருவாக்கப்படும் யாப்பின் பிரகாரம் தற்போது உள்ள அலுமினி அசோசியேசன்ஸ் தற்போதைய செயற்கழு கலைக்கப்பட வேண்டும். புதிய யாப்பின் பிரகாரம் உறுப்பினர்கள் உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்யப்பட்டு அதன் செயற்குழுவுக்கான தேர்தல் நடத்தப்பட்டு புதிய செயற்குழு தெரிவு செய்யப்பட வேண்டும்.

1993 முதல் இப்போது வரையான 30 ஆண்டு காலத்தில் யாழ் பல்கலைக்கழக அலுமினி அசோசியேசன்ஸ் யுகெ யை உருவாக்க ஐந்து தடவைகள் முயற்சி எடுக்கப்பட்டதாகத் தேசம்நெற்க்குத் தெரிவிக்கின்றார் சங்கரப்பிள்ளை முருகையா. எஸ் முருகையா யாழ் பல்கலைக்கழகத்தின் புவியில்துறையில் கற்று விரிவுரையாளராகவும் இருந்தவர்.அவர் மேலும் குறிப்பிடுகையில் “தற்போது யாப்பு தயாரிப்பு வேலைகள் முடிவுக்கு வந்தள்ளது. அதனடிப்படையில் செயற்பட்டு பல்கலைக்கழகத்திற்கும் நாட்டுக்கும் நாங்கள் முன்மாதிரியாகச் செயற்பட வேண்டும”; எனத் தெரிவித்தார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் இன, மத, பிரதேச, சாதிய வேறுபாடுகள் இல்லாமல் இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் கல்வி கற்கின்றனர். அதனால் பிரித்தானியாவில் உருவாக்கப்படும் அலுமினி அசோசியேசன்ஸ் அங்கு கற்ற அனைத்து மாணவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் செயற்படுவதே பொருத்தமானதாக அமையும் என்கிறார் சங்கரப்பிள்ளை முருகையா. மாறாக மற்றையவர்களைப் புறக்கணித்து வடக்கு கிழக்கு தமிழ் மாணவர்களுக்கான அலுமினி அசோசியேசன்ஸ் என்று உருவாக்குவது அரோக்கியமானதாக இராது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் தற்போது கணித விஞ்ஞான பீடங்களில் கற்பவர்களில் 70 வீதமானவர்கள் பெரும்பான்மைச் சமூகத்தினர், கலைப்பீடத்தில் கணிசமான தொகையில் மலையகத் தமிழர்கள் கற்கின்றனர். நாடுமுழுவதும்; இருந்து முஸ்லீம் மக்கள் கற்கின்றனர். இவர்களையெல்லாம் புறக்கணித்து வடக்கு – கிழக்கு தமிழ் மாணவர்களுக்கான அலுமினி அசோசியேசன் என்றமைப்பது அனைவருக்குமான அலுமினி அசோசியேசன் ஒன்று உருவாவதற்கு அத்திவாரம் இடுவதாகவே அமையும் என்பதையும் எஸ் முருகையா தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

கடந்த தேர்தலில் சாந்தி ரதுலோச்சனன் தலைவராக தெரிவு செய்யப்படும் வாய்ப்பு இருந்த போதும் அவர் இறுதி நேரத்தில் வெளியிட்ட நேர்காணலில் தன்னை வல்வெட்டித்துறை வீரப்பெண் என்றும் அதனால் தனக்கு வாக்களிக்கும்படி கேட்டதும் அவரது வாய்ப்பை இழக்கச் செய்ததாக சிலர் தேசம்நெற்க்குத் தெரிவிக்கின்றனர்.

ஆனால் தற்போது தலைவராக உள்ள சிவகுரு ஜெயானந்தனும் செயலாளர் புனிதா கணேஸ்வரனும் தற்போதைய செயற்குழுவை தொடர முயற்சிக்கின்றனர.; இதுவும் தற்போது அலுமினி அசோசியேசன்ஸ்க்குள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. யாழ் பல்கலைக்கழக அலுமினி அசோசியேசன்ஸ் யுகெ இன் வட்ஸ்அப் குறூப்பில் பதிவு செய்யப்படும் கருத்துக்கள் நாகரீக சமூகம் ஏற்றுக்கொள்ளத் தகாத வகையிலும் அமைந்துவிடுகின்றது என சிலர் தங்கள் அதிருப்தியை தேசம்நெற்க்குத் தெரிவிக்கின்றனர்.
இது பற்றி கருத்து வெளியிட்டுள்ள அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த அருள் பொன்னையா தனது விசனத்தை வருமாறு வெளியிட்டுள்ளார்: ஒரு விழாவை ஏற்பாடு செய்வதும் அதனை திறம்பட நடத்துவதும் இ சிக்கல்கள் வந்தால் உள்வீட்டுக்குள்ளேயே தீர்த்துக் கொளலளவும் முடியாதஇ கல்வி அறிவையும் ஆளுமையையையும் தான் பல்கலைக் கழக கல்வி தந்ததா என்ற கேள்வி எழுவதுடன் வயது என்பது கூட பக்குவத்தை கொடுக்கவில்லையா? என்ற கேள்வியும் எழ வைக்கிறது…

மோதல்கள் தொடர்வது உள ஆரோக்கியத்தையும் நிம்மதியையும் கெடுக்கும். அனேகமானவர்கள் உடல் உள ஆலோக்கியத்தை கட்டாயம் பேணவேண்டிய வயதுக்கு வந்து விட்டீர்கள். ஆவன செய்க.” என அருள் பொன்னையா சுட்டிக்காட்டியுள்ளார். இந்த அலுமினி அசோசியேசன் யுகெ விடயத்தை வலிந்து அரசியல் மயப்படுத்தும் போக்கும் துரோகி தியாகி எனக் கன்னம் பிரித்து ஆடும் நிலையும் ஆங்காங்கே தலைதூக்குவதாக சிலர் கவலைகொள்கின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *