பத்ம பூஷண் விருதை பெற்றுக்கொண்ட நடிகர் அஜித் குமார் !
நடிகர் மற்றும் கார் ரேஸர் என வலம் வந்த நடிகர் அஜித் குமார் குட் பாட் ஆக்லி ( god bad ugly ) திரைப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தலைவர் முர்மாவிடமிருந்து பத்ம பூஷன் விருதை பெற்றுக்கொண்டுள்ளார்.
மேலும் அவர் ஒரு ஆங்கிலச் செய்தி ஒன்றிற்கு நேர்காணல் வழங்கிய போது தெரிவித்த விடயங்களாவன, “நான் ஒரு நடிகர். இதுவும் என்னுடைய ஒரு வேலை தான். இந்த விருது அறிவிக்கப்பட்ட போது நெகிழ்ச்சியாக இருந்தது. குடியரசு தலைவர், இதற்கு துணையாக இருந்த நண்பர்கள் மற்றும் எனது குடும்பம் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
மேலும் என்னுடைய வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது என்னுடைய மனைவி ஷாலினி தான் என்னுடைய சாதனையில் மிகப்பெரிய பங்கு ஷாலினிக்கே உள்ளது!” எனவும் அவர் கூறியுள்ளார்.