மோதல் இடம்பெறும் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா மனிக்பாம் நிவாரண கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களிலிருந்து விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்பட்டவர்கள் என தெரிவிக்கப்படும் 200 பேர் இராணுவத்தினரிடம் சரணடைந்திருப்பதாக பாதுகாப்பு தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. அதிகாரிகளினால் பொறுப்பேற்கப்பட்டுள்ள இவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்படும் என்றும் பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
Kullan
நிச்சயம் புனர்வாழ்வுதான். தன் இனத்தையே செகுவேராக் கலவரத்தில் உயிருடன் வெட்டி எறிந்த சிங்கள அரசு: இராணுவம் இவர்களிடம் புனர்வாழ்வு என்பது வேடிக்கையான ஒன்றுதான். புனர்வாழ்வு என்பது மேலுலகத்தில்தான். என்ன புலிகளின் தாகத்துக்குத் தண்ணி கொடுத்ததால் வந்த வினைதான் இது. புலிகளின் தாகம் இரத்த தாகம் என்பதை இப்பவாவது மக்கள் உணர்வார்களாக. சிங்கத்தின் தாகம் அதைவிட மோசமானது. அது இரத்தமும் தசையும் உணர்வும் சேர்ந்தது.
நண்பன்
குள்ளன், உங்களைப் போலவே அனைவர் மனதிலும் சிங்களவன் மேல் தமிழர் தரப்புகள் ஒரு வித அச்ச உணர்வையே ஏற்படுத்தி விட்டதால் ” நிச்சயம் புனர்வாழ்வுதான். தன் இனத்தையே செகுவேராக் கலவரத்தில் உயிருடன் வெட்டி எறிந்த சிங்கள அரசு: இராணுவம் இவர்களிடம் புனர்வாழ்வு என்பது வேடிக்கையான ஒன்றுதான். புனர்வாழ்வு என்பது மேலுலகத்தில்தான். ” என்று கருத்து வைக்கிறீர்கள்.
ஒரு கருத்தை அழுத்தி சொல்லலாம். புலிகள் அளவு சிங்கள மக்களோ, படையினரோ மோசமானவர்கள் இல்லை என்பதே அது. தமிழருக்கும் சிங்கள அரசுக்குமான அரசியல் பிரச்சனையைத் தவிர்த்துப் பார்த்தால் சிங்களவன் எவ்வளவோ மேல்.
காரணம் தனது சக தமிழ் உறவுகளை ஈன இரக்கமின்றி (அது சக இயக்கங்களாக இருக்கட்டும் அல்லது புலிகளுக்கு எதிரான தமிழர்களாக இருக்கட்டும்) கொன்று குவித்தவர்கள் புலிகள். வன்னி நிலப் பரப்பில் இருந்த அனைவரும் புலிகள் என்ற நிலை இருந்த போதும் வன்னி மீட்பின் போது படையினர் அவர்களை அணுகியவிதத்தில் 10 சதவீதம் கூட புலிகள் தன் மக்கள் மீது கருணை காட்டியிருப்பார்களா என்பது சந்தேகமே?
அதற்கு ஏனைய சகோதர இயக்க அழிவுகளையும் , புலிகளுக்கு எதிரானவர்களை அழித்த விதத்தையும் , புலிகளுக்குள் பிளவு பட்டவர்களை அழித்த விதத்தையும் , புலிகளாக இருந்த இளையோர் கருணாவின் பிரிவின் போது வெருகல் பகுதிகளில் கொல்லபப்பட்டவர்களும் இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.
தேசத்தில் செய்தி வந்து இருந்தது படங்கள் இருக்கவில்லை. படங்கள் மேலதிக நம்பிக்கையைத் தரும். எனவே மற்றுமொரு சகோதர இணையத்தை இங்கு படங்களுக்காக இணைக்கிறேன்.
கடந்த சில வாரங்களுக்கு முன் கொல்லப்பட்டதாக பலரால் கருதப்பட்டவர்களை புளொட் ஈபீஆர்எல்எப் முக்கியஸ்தர்கள் சந்தித்து உரையாடி படங்களையும் வெளியிட்டு இருந்தனர். அவை இங்கே: http://vizhippu.com/?p=3375
இப்படியான பயணங்கள் மற்றும் சந்திப்புகளை தற்போது அரசியல் நீரோட்டத்தில் கலந்திருக்கும் தமிழ் இயக்கங்களோ அல்லது கட்சிகளோ சென்று பார்வையிட வேண்டும். அது இவர்களுக்கு மேலதிக பாதுகாப்பை உறுதிப்படுத்தும். போவதோடு நிற்காது அங்குள்ளவர்களது பெயர் மற்றும் விபரங்களையும் தெரியப்படுத்த வேண்டும். அது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல அங்கிருப்போருக்கு ஒரு நம்பகத்தைக் தரும். வந்தவர்களையாவது வாழ வைக்க நம்மாலான ஏதையாவது செய்வோம்.
Rohan
சரி நண்பன் – ஏன் கிழக்கு வசந்தம் வந்த பிறகும் சனம் சொந்த இடத்துக்குப் போக முடியாமல் கிடக்குது?