சங்கின் வேட்புமனுக்களை ஏற்க நீதிமன்றம் உத்தரவு !
சங்குச் சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் நீராகரிக்கப்பட்ட அனைத்து வேட்பு மனுக்களையும் ஏற்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தனது தேர்தல் கூட்டணி சார்பில் நேற்றைய தினம் யாழ் ஊடக மையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
மேலும் என்பிபி அரசாங்கம் அதாவது ஜனாதிபதி உட்பட்ட அமைச்சர்கள் அடிக்கடி வடக்கு கிழக்கிற்கு விஜயம் செய்து தமக்கு தமிழ் மக்கள் வாக்களித்தாலே பிரயோசனமாக இருக்கும். ஏனெனில் என்பிபி உள்ளூராட்ச்சித் தேர்தலில் வெற்றி பெறும் சபைகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற எச்சரிக்கையை விடுத்து மறைமுக அச்சத்தை ஏற்படுத்துகின்றனர் என்று தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன். இவ்வாறான அச்சுறுத்தல் தேர்தல் விதிமீறலாக இருந்தும் தேர்தல் ஆணையம் கண்டும் காணாமலும் இருக்கிறது என புகார் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் உள்ளூராட்சி சபைகள் மாகாண சபைகளுக்குட்பட்டவை. ஆகவே இந்த நிதி ஒதுக்கீடு தொடர்பில் மாகாண சபைகளுக்கே கூடுதல் அதிகாரம் உள்ளது என்றார்.
அத்துடன் ஜனாதிபதி அநுர தனது சகோதரனும் காணாமலாக்கப்பட்டுள்ளார். அந்த வலியை நாங்களும் அனுபவித்துள்ளோம் என்று கூறுகிறார். அதேநேரம் காணாமலாக்கப்பட்ட தமிழர்கள் தொடர்பில் அனுர அரசாங்கம் எந்தவிதமான காத்திரமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டினார்.
ஆனால் சமீபத்தில் காணாமல் ஆக்கப்பட்ட கிழக்கு பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் ரவீந்திரநாத் சிவசுப்பிரமணியம் வழக்கிலேயே பிள்ளையான் கைதாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முரசொலி ஆசிரியர் திருச்செல்வத்தின் மகன் அகிலன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்படு பிரதான குற்றவாளியாக ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் உள்ளார். ஆடு நனைகிறது என ஓநாய் அழுத கதைதான் சுரேஸ்ஸின் பேட்டி என்கிறார்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்.