பொய்யும் சாக்குப் போக்கும்: உயிர்த்த ஞாயிறு விவகாரம் தொடர்பில் அரசு மீது சஜித் கடும் விமர்சனம்

பொய்யும் சாக்குப் போக்கும்: உயிர்த்த ஞாயிறு விவகாரம் தொடர்பில் அரசு மீது சஜித் கடும் விமர்சனம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபரை இன்று வெளிக்கொணரப்போவதாக ஜனாதிபதி வாக்குறுதி அளித்திருந்தாலும், இறுதியாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை மட்டுமே குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைத்திருப்பது மக்கள் மத்தியில் மேலும் குழப்பங்களை உருவாக்கியுள்ளது. இந்தப் போக்கை கடுமையாக கண்டித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசாங்கம் கடந்த காலத்திலும் இன்றும் ஒரே மாதிரியான பொய்கள் மூலம் மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பதாக விமர்சித்தார்.

திஸ்ஸ மஹாராமவில் நேற்று (21) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய சஜித், அரசியல் நிலைப்பாடுகளைக் காட்டிலும் தற்போது அதிகம் விளங்கும் கோட்பாடாக “பொய் மற்றும் பாசாங்குத்தனம்” உருவாகி விட்டதென குற்றம்சாட்டினார். மின் கட்டண குறைப்புக்கான அரசின் வாக்குறுதியும் உண்மையில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டதென அவர் விளக்கினார். மின் கட்டணத்தில் மீதமுள்ள 13% குறைப்பையும் உடனடியாக செயல்படுத்த அரசாங்கம் முன்வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பிலும் சஜித் அதிருப்தி தெரிவித்தார். வெளிநாட்டு கடனைத் திருப்பிச் செலுத்தும் தேவையை முன்னிட்டு 2025 முதல் 2028 வரை 5%க்கும் மேற்பட்ட வளர்ச்சி விகிதத்தை நாடு அடைய வேண்டியுள்ளது என்றார். ஆனால் தற்போதைய அரசாங்கத்திடம் எந்தவொரு தெளிவான திட்டமும் இல்லையென அவர் சுட்டிக்காட்டினார். உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாததற்கான ஜனாதிபதியின் அறிவிப்பும் சட்ட விரோதமானது எனக் கூறிய அவர், மக்கள் அரசாங்கத்தின் பொய்களை இனியும் ஏற்றுக் கொள்வார்களா என்பது அவர்களது தீர்மானமாகும் என வலியுறுத்தினார்.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *