தமிழ் தேசியக் கட்சிகள் கேட்டுக்கொண்டதை மோடி, கண்டுகொள்ளவில்லை ! தமிழ் கட்சிகள் அரசியலில் பூஜ்ஜியம் !

தமிழ் தேசியக் கட்சிகள் கேட்டுக்கொண்டதை மோடி, கண்டுகொள்ளவில்லை ! தமிழ் கட்சிகள் அரசியலில் பூஜ்ஜியம் !

இந்தியப் பிரதமர் மோடியின் நான்காவது இலங்கை விஜயம் இலங்கைத் தமிழ் அரசியலின் அடித்தளத்தை ஆட்டம்காண வைத்துள்ளது. ஜேவிபி யும் இந்தியாவும் கீரியும் பாம்புமாக இருந்த நிலையிலிருந்து தற்போது மிக நெருக்கமான நண்பர்களாகி விட்டனர். மிக நெருக்கமான நண்பர்களாக இருந்த இலங்கைத் தமிழர்களதும் இந்தியாவினதும் உறவில் இடைவெளி நீண்டுகொண்டே செல்கின்றது. அரசியலில் நிரந்தர எதிரிகளும் இல்லை நிரந்த நண்பர்களும் இல்லை என்பதற்கு இலங்கை – இந்திய – தமிழர் உறவு மற்றுமொரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. ஒரு கடமைக்காக தமிழ் அரசியல் கட்சிகளுக்கு ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணியினர் தங்கள் நிலைப்பாடுகளை இந்தியப் பிரதமருக்கு விளக்கினர்.

ஆனால் இந்தியப் பிரதமர் மோடி, தமிழர்கள் விடயத்தில் தமிழ் தேசியக் கட்சிகளின் எதிர்பார்ப்பைப் பற்றி எவ்வித கவனமும் கொள்ளவில்லை. தமிழ் தேசியக் கட்சிகளுக்கு எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை. அதனால் இந்தியப் பிரதமர் மோடி என்ன சொன்னார் என்பது பற்றி தமிழ் கட்சிகள் ஊடகச் சந்திப்பில் எதனையும் தெரிவிக்கவில்லை. பிரதமர் மோடியும் எதுவும் தெரிவிக்கவில்லை.

இலங்கை – இந்தியா – தமிழர்கள் உறவின் அடிப்படையில் இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயம் தொடர்பில் சவுச் ஏசியா அபயர்ஸ் என்ற இணையத் தளத்தில் மூத்த ஊடகவியலாளல் வீரகத்தி தனபாலசிங்கம் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். அதில்; இந்தியாவும் – இலங்கையும் மிக இறுக்கமான உறவை வளர்த்தெடுக்க முனைவதைச் சுட்டிக்காட்டி இருந்தார். மேலும் அந்த உறவை பாதிக்கின்ற, இலங்கை ஜனாதிபதி அனுரவை சிக்கலாக்குகின்ற வகையில் தமிழர் பிரச்சினையை கையாள்வதில்லை என்ற முடிவிலும் இருப்பதை அவர் சுட்டிக்காட்டி இருந்தார். இந்தியா இலங்கையுடன் ஒரு முரண்பாட்டுக்குச் செல்வதில்லை என்ற கொள்கையை இறுக்கமாகக் கடைப்பிடிப்பதை ஊடகவியலாளர் வீரகத்தி தனபாலசிங்கம் அக்கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனை தமிழ் அரசியல் கட்சிகள் எவ்வளவுதூரம் உணர்ந்துள்ளது என்பது கேள்விக்குறியே. தமிழ் அரசியல் தலைமைகள் தற்போதைய பூகோள அரசியல் விடயங்களை விளங்கிக் கொள்கின்ற அளவுக்கு அரசியல் அறிவற்றவர்களாக இருப்பதாக அமைப்பின் செயலாளரும் முன்னாள் ஈரோஸ் உறுப்பினருமான ரவி சுந்தரலிங்கம் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

இந்திய – இலங்கை உறவு பற்றி குறிப்பிட்ட மூத்த ஆய்வாளர் வி சிவலிங்கம் ஜேவிவி தன்னுடைய இந்திய எதிர்ப்பு நிலையிலிருந்து எவ்வாறு பிரமாணம் பெற்று ஒரு அரசியல் ஸ்தீரணமான அமைப்பை உருவாக்கியது என்பதைச் சுட்டிக்காட்டினார். ஆனால் தமிழ் தேசியக் கட்சிகள் அவ்வாறான ஒரு அரசியல் தற்குறிகளாகத் தொடர்ந்தும் செயற்படுவதை அவர் தேசம்நெற்றிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார்.

இதே கருத்தை முன்னாள் ராஜதந்திரி ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கமும் தேசம்நெற்றிக்கு வழங்கிய நேர்காணலில் சுட்டிக்காட்டியிருந்தார். தற்போதுள்ள தலைவர்களில் இந்தியாவைக் கையாளக்கூடிய திறமை எம் ஏ சுமந்திரனுக்கே இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *