ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாசா மீண்டும் தெரிவு!
கடந்த 3 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் இடம்பெற்றுள்ளது . இந்த மாநாட்டை எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தலைமை தாங்கினார். இம்மாநாட்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாஸ மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தேசியக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து வந்த சஜித் பிரேமதாஸ தலைமையில் 2020 இல் உருவாக்கப்பட்டதே ஐக்கிய மக்கள் சக்தியாகும். அவர் சந்தித்த பாராளுமன்றத் தேர்தலிலும் சரி ஜனாதிபதித் தேர்தலிலும் சரி அவரால் வெற்றி பெற முடியவில்லை.
சஜித் பிரேமதாஸவை பொறுத்தவரை இலங்கை அரசியலில் தோல்வியடைந்த ஆளுமையற்ற தலைவராக காணப்படுகிறார். வெறுமனே தந்தையான பிரேமதாஸ ஜனாதிபதியாக இருந்தார் என்ற நெப்போரிஸத்தினூடாக அரசியலுக்குள் நுழைந்தவர். தெற்காசியாவின் சாபக்கேடான வாரிசு அரசியலின் விளைவுதான் தேசிய மக்கள் சக்தி தவிர்ந்த அனைத்து சிங்கள தேசிய கட்சிகளிலும் காணக் கூடியதாக உள்ளது.
கடந்த இரு தேர்தல்களிலும் இலங்கை மக்கள் குடும்ப அரசியலுக்கு சாவு மணியடித்த போதும் மக்கள் ஆணையை கருத்தில் கொள்ளாத ஐக்கிய மக்கள் சக்தி சஜித் பிரேமதாஸவை மீண்டும் கட்சித் தலைவராக்கியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி பாலியல் சுரண்டல் மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து அரசியலில் முகவரி வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.