அமெரிக்க சீன வர்த்தக மோதல் – மசகு எண்ணெய் விலை சரிவு!
சீனா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக மோதல்கள் உலக சந்தைகளை சிக்கலான நிலைக்கு கொண்டு சென்றதால் நேற்று வெள்ளிக்கிழமை எண்ணெய் விலைகள் சடுதியாக 8வீத வீழ்ச்சியடைந்துள்ளன. கோவிட் பெருந்தொற்று உச்சகட்டத்திலிருந்த காலங்களில் ஏற்பட்ட வீழ்ச்சிக்குப் பின் பதிவாகிய சடுதியான வீழ்ச்சி இதுவென தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வரிவிதிப்புக்கு பதிலடியாக சீனா ஏப்ரல் 10 முதல் அனைத்து அமெரிக்கப் பொருட்களுக்கும் 34% கூடுதல் வரி விதிக்கும என அறிவித்துள்ளது.