மருத்துவரை பாலியல் வன்புணர்வு செய்த நபர், அணி வகுப்பில் அடையாளங்காணப்பட்டார் !

மருத்துவரை பாலியல் வன்புணர்வு செய்த நபர், அணி வகுப்பில் அடையாளங்காணப்பட்டார் !

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் பாதிக்கப்பட்ட பெண்ணால் அடையாளம் காணப்பட்டுள்ளார். அனுராதபுரம் தலைமை நீதிவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய முன்னிலையில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பின் போது பாதிக்கப்பட்ட மருத்துவர் சந்தேக நபரை அடையாளம் கண்டார்.

மார்ச் 10 ஆம் திகதி சந்தேக நபரால் கத்தி முனையில் தடுத்து வைக்கப்பட்ட பின்னர், அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ குடியிருப்பிற்குள் பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார் இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவ ஊழியர்கள் ஒரு அடையாள வேலைநிறுத்தத்தையும் மேற்கண்டிருந்ததும் வனிக்கத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *