இனவாதத்தை தூண்டும் கருணா அம்மான் எச்சரிக்கிறார் முன்னாள் போராளி !

இனவாதத்தை தூண்டும் கருணா அம்மான் எச்சரிக்கிறார் முன்னாள் போராளி !

கிழக்கு தமிழ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதையடுத்து எனக்கு பிரித்தானிய அரசாங்கம் தடை விதித்தமை ஒரு அரசியல் நாடகம் என்கிறார் கருணா அம்மான். கிழக்கு மாகாண சபையை தவறவிடுவோமாக இருந்தால் முஸ்லிம் தலைவர்களுடைய ஆதிக்கம் அதிகரிக்கும். அதேநேரம் தமிழர்களுடைய நிலப் பிரதேசங்கள் அபகரிக்கப்பட்டு இருப்பே கேள்விக்குறியாகும் என்று முன்னாள் பிரதி அமைச்சரான கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் கிழக்கு தமிழர் கூட்டணியின் கல்குடா தொகுதிக்கான வேட்பாளர் அறிமுக விழாவில் தெரிவித்தார்.

அங்கு மேலும் உரையாற்றிய கருணா அம்மான், புலம்பெயர்ந்து வாழ்கின்ற படித்தவர்கள், புத்திஜீவிகள், வர்த்தகர்கள் சிந்திப்பதில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பை முதலில் தோற்கடிக்க வேண்டும். அவர்கள் போலித் தேசியத்தை பேசிக்கொண்டு மக்களை ஏமாற்றி இலஞ்சம் ஊழல் எல்லாவற்றையும் செய்கின்றனர். உண்மையில் போராளிகளாக இருந்தவர்கள், மாவீரர் குடும்பங்களாக இருந்து வந்தவர்கள் தான் எங்கள் மக்களை ஆளவேண்டும். அவர்களுக்குத் தான் இந்த உரிமையும் மக்களை நடத்தும் திறமையும் இருக்கின்றது.

நாங்கள் கூட்டமைப்பை உருவாக்கியது உலகம் முழுக்க பேசும் பொருளாக பார்க்கப்படுகிறது. அண்மையில் பிரித்தானியா அரசாங்கம் கருணா அம்மானாகிய எனக்கு தடை விதித்தது. நாங்கள் என்ன பிச்சை எடுக்கப்போறோமா? இவ்வளவு நாளும் இல்லாத தடை எதற்காக இப்போது விதிக்கின்றனர்? இது ஒரு அரசியலுக்கான நாடகம் தான். கிழக்கு மாகாண சபையை தவறவிடுவோமாக இருந்தால் முஸ்லிம் தலைவர்களுடைய ஆதிக்கம் வளர்ச்சியடைந்து தமிழர்களுடைய நிலப் பிரதேசங்கள் குட்டிச்சுவராகி இருப்பே கேள்விக்குறியாகும் என்றார்.

இதேவேளை அண்மையில் தேசம் திரை நேர்காணலில் கருத்து வெளியிட்டிருந்த முன்னாள் ஈபிஆர்எல்எப் போராளி சோலையூரான் , கருணா அம்மான் , பிள்ளையான் ஆகியோரின் கூட்டணி மீள ஓர் இனவாத அரசியலையும் முஸ்லீம்கள் மீதான வெறுப்பு உணர்வையும் விதைத்து அரசியல் செய்ய முற்படுவதாக குற்றஞ்சாட்டியிருந்ததுடன் இதேநபர்கள் கிழக்கில் செய்த படுகொலைகள் ஏராளமானவை எனவும் குற்றஞ்சாட்டினார் . அத்துடன் உங்களால் இத்தனை பெரிய படுகொலைகளை செய்த ரணிலுடனும் , மகிந்தவுடனும் கூட்டணி அமைக்க முடியுமானால் எங்களுடன் கூடவே வாழும் முஸ்லீம்களுடன் பேசுவதில் என்ன சிக்கல் இருக்கப்போகிறது எனவும் சோலையூரான் கேள்வி எழுப்பியுள்ளார் .

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *