பன்றிக் காய்ச்சல் நோய் பரவுவது குறித்து சுகாதார அமைச்சு எச்சரித்திருப்பதால் தென் பகுதிகளில் உள்ள உல்லாசப் பயணிகள் ஹோட்டல்களில் பன்றி இறைச்சி உணவுக்காக பயன்படுத்துவது நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இங்கு காட்டுப் பன்றி வேட்டையும் நிறுத்தப்பட்டு வருகிறது.
பன்றி இறைச்சி இங்குள்ள விடுதிகள், ஹோட்டல்களில் தாராளமாக பயன்படுத்தப்பட்டு வருவது வழக்கமாகும்.
வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் மட்டுமல்ல உள்நாட்டு உல்லாசப் பயணிகளும் இங்குள்ள ஹோட்டல்களுக்கு பன்றி இறைச்சியை விரும்பி அதிகம் வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேபோல வீதிகளில் விற்கப்படும் பண்ணை வளர்ப்பு பன்றி இறைச்சிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.