விடுதலைப் புலிகள் தமிழர்களை தாக்குவதாலும் அவர்களை கேடயமாக பயன்படுத்துவதாலும் தமிழர்கள் அதிக அளவு இறக்கின்றனர் என திமுக பொதுச் செயலர் க.அன்பழகன் கூறியுள்ளார். திமுக கூட்டணிக் கட்சியின் கடலூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.அழகிரியை ஆதரித்து செவ்வாய்க்கிழமை பண்ருட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசும் போதே இதை குறிப்பிட்டார்.
இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என கருணாநிதி சட்டப்பேரவையில் தீர்மானமும், அனைத்துக் கட்சி கூட்டத்தையும் கூட்டினார். போரை நிறுத்த சொல்ல நமக்கு உரிமை கிடையாது, மத்திய அரசுதான் சிங்கள அரசை வலியுறுத்தும். அதற்காக கருணாநிதி முயற்சி எடுத்தார். விடுதலைப் புலிகளை பாதுகாக்க நாம் நடவடிக்கை எடுக்க முடியாது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சியின் எண்ணிக்கை அதிகமானால் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையும், இதனால் இந்தியாவும், தமிழகமும் பலன்பெறும். இந்த அணியை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கம்யூனிஸ்டுகள் 3-வது அணி அமைத்து தவறான எண்ணத்தை பரப்புகின்றனர். சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என கூறிய வைகோஇ ராமதாஸ் அத்திட்டத்தை தடை செய்ய நினைக்கும் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளனர் என்றார் அன்பழகன்.
Anonymous
அன்பழன் கருனாநிதி குடும்பஎடுபிடி அவர் அந்தாவேலையை பர்பதெனல்லது
நண்பன்
கலைஞரும் ஈழம் பெற்றுக் கொடுக்கப் போறதாக அறிவித்துள்ளார்.
ஈழம் ஏற்கனவே இருக்கிறது. தமிழ் ஈழம் பெற்றுக் கொடுப்பாரா?