வவுனியா பறையனாலங்குளம் பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் தங்குவதற்கென நிவாரண கிராமம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. 1200 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த கிராமம் அமைக்கப்படுகிறது. வலயம் 4 என பெயரிடப்பட்டுள்ள இந்த கிராமத்தில் மக்கள் வரைவில் குடியமர்த்தப்படுவர்.
இதில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் மீள்குடியேற்றத்திற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
Theepan
This is nothing more than a concentration camp. this is not excellent but the truth was telecasted on Chanel 4 on 05/05/09. ………
மாயா
//Theepan on May 8, 2009 6:50 am This is nothing more than a concentration camp. this is not excellent but the truth was telecasted on Chanel 4 on 05/05/09. ………//
ஏற்கனவே ஊடகம் ஒன்றினால் எடுக்கப்பட்ட ஒளிப்பதிவுகளோடு மூவரது முகம் தெரியாத மறைக்கப்பட்டவர்கள் இணைக்கப்பட்டு Chanel 4 ஒளிபரப்பியது. இது Chanel 4க்கு புலி ஆதரவாளர்களாலேயே வழங்கப்பட்டது. இவை Chanel 4 நேரடியாக ஒளிப்பதிவு செய்ததல்ல.அது குறித்து Chanel 4 அறிவிப்பின் போது சொல்கிறார்கள். வெளி ஒளிப்பதிவாளரால் பதிவு செய்யப்பட்டதாக…….
பொய் பரப்புரைகளில் வாழ்வை கடத்திய புலிகளுக்கு இவை சர்வ சாதாரணமானவை. இருட்டில் இவர்களை வைத்து படம் எடுத்து பொருத்திக் கொடுப்பது.
சம்பந்தப்பட்ட இந்த முகாமில் ஐநா மற்றும் செஞ்சிலுவை பணியாளர்கள் இருக்கிறார்கள். ஒன்றரை லட்சம் மக்கள் வாழும் ஓரிடத்தில் நடக்கலாம். இப்படி தமக்கு எதுவும் தெரியாது என அங்கு பணிபுரிவோரே சொல்கிறார்கள்.
அது குறித்த உண்மை தகவலை அடுத்த நாள் பீபீசீ வெளிக் கொண்டு வந்தது.
Chanel 4 செய்தி:
http://www.channel4.com/news/articles/politics/international_politics/grim+scenes+at+sri+lankan+camps+/3126257
புலிகளை விட்டு வெளியேற முயலும் பொது மக்களை சுட்டுத் தள்ளும் புலிகள் இவை குறித்து மட்டும் அக்கறை படுவதாக இருந்தால் அவர்கள் சுட்டுத் தள்ளும் மக்கள் குறித்த தகவல்களையும் கொண்டு வரலாமே?
அதையும் படையினர் சுட்டதாக அல்லவா காட்டுகிறார்கள்?