மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் பாவற்கொடிசேனை விநாயகர் வித்தியாலய ஆசிரியரான பாலசிங்கம் ரவீந்திரராஜா கொல்லப்பட்ட சம்பவத்தை கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ பி ஆர் எல் எப் பத்மநாபா அமைப்பின் முக்கியஸ்தருமான இரா. துரைரட்ணம் கண்டித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கஷ்ட பிரதேசங்களில் ஆசிரியர்கள் பணியாற்றுவதற்கு தயக்கம் காட்டுகின்ற போது சேவை நோக்குடன் அங்கு பணியாற்றி வந்த ஆசிரியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமையானது கண்டிக்கத்தக்க விடயம். தற்பொழுது கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சதீஸ்குமார் தினுஷ்சிக்காவின் சம்பவம் குறித்த பீதியடைந்த கல்விச் சமூகம் அதிலிருந்து விடுபடாத நிலையில் இந்த படுகொலை; இடம்பெற்றுள்ளது. ஆயுத வன்முறை செய்யுமளவிற்கு ஆசிரியர்கள் நலிவடைந்தவர்கள் அல்ல. எனவே இந்த படுகொலை சம்மந்தமாக தீவிர விசாரணை நடத்தி சம்மந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் என அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.