தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்க, பாதுகாப்பு வலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்படவேண்டும் என புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்த கருத்தை மேல்மாகாண மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கண்டித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமையன்று ரங்கே பண்டார, தெரிவித்த இந்த கருத்து இனவாதத்தை தூண்டும் செயல் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் ஐக்கிய தேசியக்கட்சியும் தமிழர்களுக்கு எதிரான கட்சியே என மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.