ஜனாதிபதியும் சி.ஐ.டியினரும் முட்டாள்கள், முடிந்தால் மௌளானாவை முதலில் விசாரியுங்கள் – பிள்ளையான்
உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி வெளிநாட்டில் நிரந்தர வதிவிட உரிமை கோரும் மௌலானாஇ ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். அரசாங்கம் முடிந்தால் மௌளானாவை நாடுகடுத்தி இலங்கைக்கு கொண்டு வந்து விசாரிக்க வேண்டும். இல்லையேல் சுவிஸ்க்குச் சென்று விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் தேசம்நெற்க்கு வழங்கிய செய்தியில் தெரிவித்து இருந்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆறு வருடங்களிற்கு முன்னர் இடம்பெற்றது. ஏன் அவர் அந்தவேளை அது குறித்த விபரங்களை அம்பலப்படுத்தாமல் நான்கு வருடங்கள் காத்திருந்த பின்னர் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கும் சனல் 4ற்க்கும் சென்றார்? என கேள்வியெழுப்பிய பிள்ளையான், தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனிவிரட்ண உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றவேளை சி.ஐ.டியின் தலைவராக பணியாற்றினார். ஜனாதிபதியும் சி.ஐ.டியினரும் முட்டாள்கள். அவர்களுக்கு ஆயுதங்களை கைவிட்டவர்களிற்கும், ஐ.எஸ். மற்றும் முஸ்லிம் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை புரிந்துகொள்ள முடியாதா? என தெரிவித்தார்.
இதேவேளை ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தன்மீதான குற்றச்சாட்டு பற்றி மௌனம் களைத்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ‘ ஈஸ்டர் தாக்குதல் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை தயவு செய்து படிக்குமாறும், சிஐடி அதிகாரிகள் அளித்த சாட்சியங்கள் உட்பட ‘அந்த அறிக்கையில் உள்ளதைத் தவிர வேறு தனக்குத் தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.