கிளிநொச்சியில் சிங்களவனால் இறக்கப்பட்ட புலிக்கொடி இன்று உலகெங்கும் பட்டொளி வீசிப் பறக்கிறது; – சீமான்

semaan.jpg
கிளிநொச்சியிலே பறந்த புலிக்கொடியை இறக்கினான் சிங்களவன். இன்றோ, கிளிநொச்சியில் பறந்த புலிக்கொடி உலகெங்கும் பட்டொளி வீசிப் பறக்கிறது. இவ்வாறு  சென்னையில் நடைபெற்ற கவியரசு எழுதிய ‘மேலைக் கடலில் ஈழக்காற்று’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் சீமான் ஆவேசமாகப் பேசினார்.
 
இவ்விழாவில் கலந்து சிறப்பித்த இயக்குனர்  சீமான், ஒரு மணிநேரம் உணர்ச்சிமயமான உரை நிகழ்த்தினார். இங்கே நான் பேசுவதால் எனக்குப் பிரச்சினையில்லை. ஆனால் உங்களுக்கு ஏதும் பிரச்சினை வந்துவிடப் போகிறது. காரணம் என்னைப் புலி என்கிறார்கள். நண்பர்களே!  யார் புலி? இந்த சீமான் புலிதான். நான் மட்டுமல்ல.என் ஈழத்து அக்கா தங்கையை கற்பழித்து மானபங்கப்படுத்தியவர்களை எதிர்த்துக் குரல் கொடுக்கும் அனைவருமே போராளிகள்தான்.  புலிகள்தான்!

கிளிநொச்சியிலே பறந்த புலிக்கொடியை இறக்கினான் சிங்களவன். இன்றோ, கிளிநொச்சியில் பறந்த புலிக்கொடி உலகெங்கும் பட்டொளி வீசிப் பறக்கிறது. பிரபாகரனை என் அண்ணன் என்று சொன்ன ஒரே காரணத்துக்காக என்னை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்ததாக எனக்கு விளக்கம் அளித்துள்ளார்கள்.

இத்தாலி சோனியாவை “பாரதத்தின் அன்னை” என்று அழைக்கும்போது, என் சொந்த இரத்தம், என் தொப்புள் கொடி உறவு பிரபாகரனை அண்ணன் என்று சொல்லாமல் வேறு என்னவென்று அழைப்பேன். தமிழன் சாவதை, தமிழ்ப் பெண்கள் மானம் சூறையாடப்படுவதை, தமிழ்ச் சகோதரன் வெட்டப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாய் கிட்பபதை நம்மால் வேடிக்கை பார்க்க முடியாது. இழவு வீட்டில் அழத்தானே செய்வார்கள். வாய் மூடி நடிக்க இங்கே என்ன படமா எடுக்கிறார்கள்..சூடு சொரணை இல்லாத ஈனப்பயலா நாங்க…இலங்கை என்ற ஒரு நாடு கிடையாது. ஈழம்தான் அதன் உண்மையான பெயர். சட்டம், போலீஸ், இராணுவம், வரி வசூல், கல்வி, போக்குவரத்து.  என ஒரு பிரபாகரன் கட்டியெழுப்பிய ஒரு அற்புதமான நாட்டை அழிக்க முழு முதல் காரணம் இந்த காங்கிரஸ். அந்தக் காங்கிரஸ் இந்த மண்ணிலிருந்தே விரட்டப்பட வேண்டும். நான் செத்தாவது இந்தக் காங்கிரஸை விரட்டியடிப்பேன்’’ என்று ஆவேசமாக பேசினார்   சீமான்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    உள்ளூரில் ஒழுங்காக உழ முடியாத மாடு எப்படி வெளியூரில் விலை போகும் என்பதை சீமான் புரிந்து கொள்ள நெடுநாள் எடுக்கும். அதுவரை புலிக்காய்ச்சல் அவரைப் பிடித்தாட்டத்தான் செய்யும்.

    Reply
  • murugan
    murugan

    புலன்பெயர் நாடுகளில் தமிழீழம் வந்து ஒரு மாத காலமாகின்றது.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    ஒரு சிலர் மண் மீட்க கத்தினார்கள். அதை கொடுத்தாச்சு.
    சீமான் கொடி மீட்க கத்துகிறார்.அதுவும் …………

    Reply
  • thurai
    thurai

    அன்பு மிக்க சீமானே,
    உங்கள் அண்ணண் ஈழ்ததமிழர்களிற்கு தமிழீழத்தை மீட்டுத்தரமாட்டார் என்பது உலகறிந்த விடயம். கொலைகளிலும், மக்களின் மரணங்களிலும் மகிழ்ச்சி காண்பவர். கடைசி நேரத்திலாவது ஒரு தமிழனையாவது தன் உயிரைக்கொடுத்து காத்து வீரமரணமடைவாரா?

    துரை

    Reply
  • msri
    msri

    உணர்ச்சிவசப்பட்ட “புலிரசனை” என்ற ஒன்றை நீக்கிவிட்டுப் பார்த்தால்>சீமானின் பேச்சு -நடவடிக்கைகளில்> தமிழமக்கள் அவலம்-நலன்கள்-விஞ்சி நிற்கின்றன! தமிழ்மக்கள் அழிவிற்கு காங்கிரசு அரசின் கடந்தகால கபடநாடக நடவடிக்கைகளே பிரதான காரணி!புலிகளை இல்லாதாக்குவதாக சொல்லி>பெரும் மனிதப்பேரவலம்-இனச்சுத்திகரிப்பு-மகிந்தப் பேரனவாதத்தின் தான் என்ற உலகை மதியா திமிர்ப் பொக்கிற்கும்உதவியுள்ளது!

    Reply