சம்பளத்தை ஒறுத்து ஜெயலலிதா மாதிரி பணியாற்ற வேண்டாம் ! சம்பளத்தை பெற்று வினைத்திறனுடன் பாணியாற்றுங்கள்!
தேசிய மக்கள் சக்தியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகளும் ஒரு வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
நிஹால் கலப்பத்தியுடன் ஆரம்பமான பயணத்தை தாங்கள் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொரளையில் உள்ள மக்கள் வங்கியில் உள்ள தற்போதைய வங்கிக் கணக்கில் தொடர்புடைய கொடுப்பனவுகள் வைப்பிலிடப்படும் என்றும், பின்னர் அந்தப் பணம் பொது சேவைக்குப் பயன்படுத்தப்படும் என்று கூறிய பிரதி அமைச்சர், இது மக்களுக்கு மேலும் சேவை செய்வதற்கான வாய்ப்பை உருவாக்கும் என்றும் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களுக்கு சட்டப்படி கிடைக்கக் கூடிய பணத்தை அவர்களிடமே கொடுப்பதே ஆரோக்கியமானது அரசியல் ஆய்வாளர் த ஜெயபாலன்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் குடும்பங்கள் சொந்த பந்தங்கள் செலவுகள் உண்டு. கட்டுப்பாடு என்ற பெயரில் அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய சம்பளத்திலும் கை வைத்தால் அவர்கள் நீண்ட காலத்தில் சேவை மனப்பான்மையோடு மட்டும் பணியாற்ற முடியாது போகும் முன்னாள் தமிழ் நாட்டு முதலமைச்சர் சம்பளம் பெறவில்லை. ஆனால் அவர் கோடிக்கணக்கில் சொத்துக்களைச் சேர்த்தார். பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சம்பளத்தை ஒறுத்துப் பணியாற்றத் தேவையில்லை. அரச நிதி வினைத்திறனுடன் பயன்படுத்துப்படுவதை உறுதிப்படுத்தினாலேயே போதும் எனவும் த ஜெயபாலன் தெரிவித்தார்.