கண்டாவளை, பளை முதல் புத்தளம் வரை கள்ள மரம் கடத்தல், மணல் அகழ்வு: அரசியல் தலைவர்கள் !

கண்டாவளை, பளை முதல் புத்தளம் வரை கள்ள மரம் கடத்தல், மணல் அகழ்வு: அரசியல் தலைவர்கள் !

 

மணல் அகழ்வு மோசடி சம்பவத்தின் பின்னணியில் இரண்டு முக்கிய அரசியல்வாதிகள் இருக்கின்றமை தெரியவந்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்

பாராளுமன்றத்தில் இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அமைச்சர் சமந்த வித்யாரத்ன, சிலாபம் மணல் நிறுவனத்திற்குச் சொந்தமான பளை என்ற பகுதியில், ஒதுக்கப்பட்ட அளவை விட அதிகமாக மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது ஒரு பாரிய மோசடி என்று தெரிவிj;jhu;. சுமார் 400 மில்லியன் ரூபா ஊழல் பரிவர்த்தனை மற்றும் மோசடி நடந்ததாக தெரியவருகின்றது

இந்த மோசடிக்கு இறுதியில் யார் பொறுப்பு என்று சொல்ல முடியாது. ஆனால் இரண்டு முக்கிய அரசியல்வாதிகள் இதில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்த அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பல ஒப்பந்ததாரர்கள் பற்றிய தகவல்களும் எமக்கு கிடைத்துள்ளன. இது தொடர்பான விசாரணைகள் தற்போது இடம்பெறுகின்றன என அமைச்சர் மேலும் தெரிவித்தார்

வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் மரங்களை வெட்டுதல், மணல் அகழ்வு என பல சட்டவிரோத செயற்பாடுகளின் பின்னணியில் பா உ சிறிதரன் இருப்பதாகக் குற்றசம்சாட்டப் படுகின்றது. பா உ சிறிதரனின் மனைவியின் ஊரான கண்டாவளையில் பெரும் மணல் களவு இடம்பெற்று வருகின்றது. கிளிநொச்சியில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கும் தமிழரசுக் கட்சிக்குமிடையே நெருங்கிய உறவுகள் இருப்பதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

இதேவேளை கடந்த ஆண்டு தேசம் திரை நேர்காணலில் பங்குபற்றியிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தமிழரசுக் கட்சியில் சில பணம் படைத்தவர்கள் உள்ளதாகவும் அவர்கள் மரம் வெட்டுதல், மணல் அகழ்வு போன்ற சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என தெரிவித்தார். அத்துடன் அவர்கள் தொடர்பில் சிறீதரன் எம்.பியோ அல்லது கட்சியின் பிரபல அரசியல் தலைவர்களோ நடவடிக்கைகள் எடுப்பதில்லை எனவும் இந்த சட்டவிரோத செயற்பாடுகள் மூலம் கிடைக்கும் பணமே சிறீதரன் உள்ளிட்டோர் அங்கத்துவம் வகிக்கும் தமிழரசுக் கட்சியின் தேர்தல் காலங்களில் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றஞ்சாட்டி இருந்தது கவனிக்கத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *