மக்களோடு மக்களாக உலவும் என்.பி.பி பா உ க்கள், அமைச்சர்கள் !
தொடருந்து சேவையில் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மக்களோடு மக்களாக தொடருந்தில் பயணித்துள்ளார்.
இதன்போது, தொடருந்தில் தன்னுடன் பயணித்த பயணிகளிடம் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க கலந்துரையாடிய காணொளி பலருடைய கவனத்தையும் ஈர்த்துவருகிறது.
அடிக்கடி இடம்பெறும் தொடருந்து தாமதங்கள், மின் விசிறிகள் பழுது, தொடருந்துகளில் ஏறுவதில் மாற்றுத் திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள், தண்டவாளங்கள் மற்றும் தொடருந்து நிலையங்களில் சுகாதார சீர்கேடு, பாதுகாப்பற்ற பாழடைந்த தொடருந்தை தொடர்ந்து பயன்படுத்தல் போன்ற பிரச்சினைகளை பொதுமக்களிடம் இருந்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க கேட்டறிந்துள்ளார்.
இதே போன்று யாழ் பா உ க இளங்குமரன் யாழ் பஸ்தரிப்பு நிலையத்திற்குச் சென்று மக்களின் குறைகளைக் கேட்டறிந்து கொண்டார்.
முன்னதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மழைவெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நேரடியான கள ஆய்வு மூலம் ஆராய்ந்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தது மீனவர்கள் பலரையும் மகிழ்ச்சிப்படுத்தியிருந்தது.