ஆலயங்கள் நீதிமன்ற வழக்குகளுக்கே அதிகம் செலவு செய்கின்றன – ஆளுநர் வேதநாயகன் !

ஆலயங்கள் நீதிமன்ற வழக்குகளுக்கே அதிகம் செலவு செய்கின்றன – ஆளுநர் வேதநாயகன் !

 

ஆலயங்கள் இப்போது சமூகசேவைக்கு செலவு செய்வதிலும் பார்க்க வழக்குகளுக்கே அதிகளவு பணத்தைச் செலவு செய்கின்றன என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன்இ அன்னை சிவத்தமிழ் செல்வி பண்டிதை கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் நூற்றாண்டு விழா நிகழ்வில் கலந்துகொண்டு தெரிவித்துள்ளார். அண்மையில் லண்டன் லூசியம் சிவன் ஆலயத்திலும் இவ்வாறு வழக்குகளில் ஏராளமான நிதி செலவழிக்கப்படுவதான குற்றச்சாட்டு தேசம்நெற் இல் வெளிவந்தது. புலம்பெயர்ந்த நாடுகளிலும் பல ஆலயங்கள் நீதிமன்றம் ஏறி இறங்கி மக்கள் சேவைக்குப் பயன்படுத்து நிதியை வீணடிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாகவே வைக்கப்பட்டு வருகின்றது.

 

குறித்த நிகழ்வுகளில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் வேதநாயகன், 1993ஆம் ஆண்டு காலப் பகுதியில் தெல்லிப்பழை பிரதேச செயலக உதவி அரசாங்க அதிபராக இருந்தமையை நினைவுகூர்ந்து அன்றைய நாட்களில் அம்மையாருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்புக் கிடைத்ததாகக் குறிப்பிட்டார். அன்றைய காலத்தில் ஆலயங்கள் சமூகப் பணிகளை முன்னெடுக்காதிருந்த சூழலில், அம்மையார் அவர்களே அதனைத் தொடக்கி அதன் முன்னோடியாக இருந்ததாகவும் புகழாரம் சூட்டினார். இன்று ஆலயங்களில் உண்மையான கடவுள் பக்தி இல்லை. இதனால் பல ஆலயங்கள் நீதிமன்றப்படியேறியுள்ளன எனக் குறிப்பிட்டார்.

 

புலம்பெயர் தேசங்களிலிருந்து ஆலயங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டாலும் ஆலய நிர்வாகங்கள் ஒழுங்காக கணக்கறிக்கைகள் முன்வைப்பதில்லை எனவும் இது பிரச்சினைகளுக்கு அடிநாதமாக இருக்கின்றது என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

 

தனது உரையில் நா வேதநாயகன் ஆறுதிருமுருகனை தங்கம்மா அப்பாக்குட்டி அடையாளம் காட்டியதாக எந்த அடிப்படையில் குறிப்பிட்டார் எனத் தெரியவில்லை என அந்நிகழ்வில் கலந்துகொண்ட தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் சேவைகளில் விருப்புக் கொண்ட மயில்வாகனம் குமரகுரு. அவர் மேலும் குறிப்பிடுகையில் சிறுமிகள் இல்லத்தில் என்ன நடந்தது தொடர்பான சுயாதீன விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிடுவதுடன் கிளீன் சைவம் என்ற புரஜக்ற்றும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *