கனடாவில் தமிழ் இளைஞன் காருக்குளிலிருந்து சடலமாக மீட்பு !

கனடாவில் தமிழ் இளைஞன் காருக்குளிலிருந்து சடலமாக மீட்பு !

 

கனடாவில் வாழும் வவுனியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 4ம் திகதி (04.01.25) காருக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா செட்டிகுளம் வீரபுரம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய ஜேக்கப் நெவில் டிலக்ஷன் என்ற இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரின் கதவுகள் திறக்கப்படாமையால் நீண்ட நேரம் காரில் சிக்கியதில் ஏற்பட்ட மூச்சுத் திணறலால் அவர் இறந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் ஏன் அவரால் காரை உடைத்துக்கொண்டு வெளியேவர முடியவில்லை என்பது இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை. கார்கள் பொதுவாக காற்றுப் புகாதவையாக வடிவமைப்பு செய்யப்படுவதில்லை. மேலும் காருக்குள் ஒரு மணிநேரமே இருந்ததால் மூச்சுத் திணறி இறந்ததும் விளக்மில்லாமல் உள்ளது.

கனடாவின் டொராண்டோவில் குறித்த இளைஞன் இறந்த தெருக்களில் உள்ள கண்காணிப்புக் கமாராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்துள்ளனர். அதில், காரை சாலையோரம் நிறுத்திய பின் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்த இளைஞன் காருக்குள் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் கனடாவின் ரொறன்ரோ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *