சர்வதேச தமிழ் தேசிய ஆதரவோடு ஆட்சிக்கு வந்த மைத்திரி அடிக்கல் நாட்டிய தையிட்டி விகாரையும் கஜாவின் போரட்டமும் !
யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்சவைத் தோற்கடித்து சர்வதேசத்தின் ஆதரவோடு தமிழ் தேசியமும் இணைந்து மைத்திரியை ஜனாதிபதியாக்கினர். இந்த ஜனாதிபதி அவசர அவசரமாக அடிக்கல் நாட்டியது தான் இந்தத் தையிட்டி விகாரை, இந்த விகாரையின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு அன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது . அப்போது கஜா கோமாவில் இருந்தாரா தெரியவில்லை. நேற்று நடந்த இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்டவர்களும் பொது மக்கள் சிலரும் கலந்துகொண்டிருந்தனர் . குறித்த போராட்டத்தின் போது பொலிஸார் – ஆரப்பாட்டக்காரரிடையே போராட்ட நிலை வலுவடைந்துள்ளதுடன் இதனை கஜா – கஜா குழுவினர் சமூக வலைத்தளங்களில் தமிழீழ விடுதலைப் போராட்டம் செய்தது போல பகிர்ந்து கொண்டிருப்பதையும் அவதானிக்க முடிகிறது.
நாட்டில் நல்லிணக்க சூழல் ஒன்று உருவாகும் நிலையில் இத்தகைய செயற்பாடுகள் பலரை முகஞ்சுழிக்க வைத்துள்ளது. குறித்த தையிட்டி விகாரை 2021 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு முழுமை நிலையை அடைந்தது. குறித்த விகாரை அமைக்கப்பட்டிருப்பது தனியார் காணியில் . இக்காணி வலிகாமம் வடக்கு பிரதேசசபைக்குட்பட்ட பகுதியாகவே காணப்படுகிறது. ஆதலால் வடக்கு பிரதேச சபையினரையே கஜா கஜா குழுவினர் கைநீட்டி கேள்வி கேட்க வேண்டியுள்ளது. இதேவேளை குறித்த விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களில் ஒருவரான ஆறுமுகம் பத்மநாதன் என்பவர் விகாரை அமைக்கப்படும் போதே அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் இது தொடர்பில் முறைப்பாடளித்ததாகவும் அப்போது யாருமே கண்டு கொள்ளவில்லை எனவும் இப்போது தான் கோமாவிலிருந்து எழும்பிய மாமாக்கள் மாதிரி நடிக்கிறார்கள் தமிழ் தலைவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் விகாரை அமைக்கும் போதே நிபுணத்துவம் மிக்க சட்டம்பிகளை வைத்திருக்கிறோம் என கூறும் கஜா கஜா கோஷ்டி விகாரை அமைக்கும் போது கோமா நிலையில் இருந்து விட்டு பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் போதும் – தற்போது பாராளுமன்ற தேர்தல் தோல்வியின் பின்பும் போராட்டங்களை மேற்கொண்டு மக்களின் கவனத்தை திசைதிருப்ப முயற்சிப்பதாக பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். விகாரைப்பணிகள் முழுமைகண்டு விட்ட நிலையில் ஒரு மதஸ்தலத்தை இடிப்பதோ அல்லது அதனை இல்லாதாக்குவதோ மிகவும் உணர்வுபூர்வமான விடயம் . இனிமேல் இந்த விகாரையை அகற்றுவது நடக்க முடியாத காரியம் என்பது தெரிந்தும் கூட அடுத்த மாகாண சபை . உள்ளூராட்சி தேர்தல்களை இலக்கு வைத்து தன் இருப்பை நிலைநாட்ட கஜா குழுவினர் இந்த போராட்டங்களை தம் அரசியலுக்காக பயன்படுத்தி வருகின்றனர். இதே போல் தான் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் காணாமல் போனவர்கள் தான் என்பதைத் தெரிந்தும் வாக்கு வங்கி அரசியலுக்காக அதனை தொடர்ந்தும் செய்கின்றனர் என யாழ் அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.