கனடாவில் தமிழ் துப்பாக்கித் தம்பதிகள் கைது!

கனடாவில் தமிழ் துப்பாக்கித் தம்பதிகள் கைது!

இளம் தமிழ்த் தம்பதியொன்று இரண்டு துப்பாக்கிகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் ரொறன்டோ ஸ்காபுரோவில் கைது செய்யப்பட்டுள்ளனர். ரொறன்ரோவை சேர்ந்த 37 வயதான தனராஜ் தங்கராஜா மற்றும் 37 வயதான கிஷானி பாலச்சந்திரன் ஆகிய இருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர். கணவன் மீது 8 குற்றச்சாட்டுகளும் மனைவி மீது 3 குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டுள்ளன. டிசம்பர் 3 திகதி மார்க்கம் வீதி மற்றும் ஷெப்பர்ட் அவென்யூ பகுதியில் பொலிஸார் சுற்றிவளைப்பில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்றை சோதனை செய்த போது இந்த தம்பதிகள் சிக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பிலிருந்து யாழுக்கு சொகுசு காரில் வந்து கொள்ளையிட்டுச் செல்லும் தம்பதிகளைப் பொலிஸார் தேடிவருகின்றமையை தேசம்நெற் நேற்றைய செய்தியில் வெளியிட்டு இருந்தது. கணவன் மாட்டிக்கொண்டார். மனைவி தப்பித்துக்கொண்டார்.

இதேபோன்று இரண்டு வருடங்களுக்கு முன்னரும் துப்பாக்கிககள் வைத்திருப்போர் தொடர்பான விசாரணைகளின் போது பிரம்டனில் இரண்டு சகோதரர்கள் கனேடிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 29 வயதான ஜோன்சன் ஜெயகாந்தன் மற்றும் 30 வயதான ஜெய்சன் ஜெயகாந்தன் ஆகிய இருவரும் சட்டவிரோதமாக பெறப்பட்ட துப்பாக்கிகளை வைத்திருந்தமைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது மேலும் பல குற்றச்சாட்டுகள் உள்ளன.

புலம்பெயர் நாடுகளில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட இளையோர் இடையே பெருகிக் கொண்டுவரும் வன்முறைக் குற்றங்கள் தொடர்பில் புலர்பெயர் தமிழ் அமைப்புக்கள் காத்திரமான கருத்தாடல்களை ஆரம்பிக்க வேண்டும். ஈழத்தமிழர்கள் மேற்கு நாடுகளை நோக்கி புலம்பெயரத்தொடங்கிய காலந்தொட்டு புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களிடையே வன்முறை குழுக்கள் செயற்பட்டிருக்கின்றன. பெரும்பாலும் அக் குழுக்கள் நாட்டில் செயற்பட்டுக் கொண்டிருந்த ஆயுத அமைப்புக்களின் நீட்சியாகவே இருந்தன.

ஆனால் தற்போது புலம் பெயர் தமிழ்மக்களிடையே புலம்பெயர் நாடுகளிடையே காணப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறைக் குழுக்கள் பெரும்பாலும் இரண்டாம் தலைமுறையை உள்ளடக்கியதாக உள்ளன. இவ்வாறான குழுக்கள் கனடா மற்றும் பிரான்ஸில் அதீத செல்வாக்குடையனவாக காணப்படுகின்றன. அது மட்டுமல்ல நாட்டில் போராட்டத்தின் முடிவின் பின் வெடித்த வாள் வெட்டுக்குழுக்கள் குறிப்பாக ஆவா குழு போன்ற வன்முறைக் குழுக்கள் புலம் வரை தமது ஆதிக்கத்தை செலுத்துகின்றன. அந்தவகையில் கடந்த வாரம் லார்க்கூனேயில் 1995இல் பிறந்த ஒரு தமிழ் இளைஞன் சிவராஜா தனுசன் கலிபர் வகை துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *