பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் அடங்கிய தூதுக்குழுவொன்று நாளை திங்கட்கிழமை வடபகுதி மனிதாபிமான நிலைமை தொடர்பாக ஆராய்வதற்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளது. பக்கிங்காம் எம்.பி. கட்சியின் ஜோன் பேர்கவ், முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் டெஸ் பிறவுண், ஸ்கொட்லாந் எம்.பி. மக்கெலம் புரூசி, வட அயர்லாந்திற்கான எம்.பி. எட்வட் மக்கிரடி மற்றும் தொழிலாளர் கட்சி எம்.பி. மொஹமட் சர்வர் ஆகியோரே இக்குழுவில் அடங்கியுள்ளனர்.
இவ் இருநாள் விஜயத்தின் போது இவர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் பல்வேறு அரசாங்க எதிர்க்கட்சித் தலைவர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்திக்கவுள்ளனர். இவ்விஜயம் இலங்கை அரசாங்கம் விடுத்த அழைப்பின் பேரிலேயே மேற்கொள்ளப்படுகிறது.
Kullan
சந்தித்து என்ன செய்யப்போகிறீர்கள். நீங்கள் எல்லோருமாகத் தீர்மானித்து விட்டீர்கள் கொன்று குவித்தபின் காசு கொடுத்து கட்டி எழுப்புவம் என்றும் ஐரோபிய தமிழ் அகதிகளை கலைத்துப்பிடித்து ஏத்தி எனுப்புகிறது என்று. இதற்குப்பிறகு ஊர்வலங்கள் உண்ணாவிரதம் எல்லாம் எந்த மூலைக்கு. இப்பபோகிறீர்கள் பார்ப்பீர்கள் புனருருத்தானத்துக்கு பணம் கேட்பார் ஜனாதிபதி. நீங்கள் திருப்பிக் கேட்பீர்கள் அகதிளை அனுப்பினால் ஏற்பாயோ என்று ஆம் என்பார் அவரும். ஐரோப்பாப் பிரச்சனை இப்படித் தீரும்