ராஜபக்சேவின் குரலை பிரதி பலிக்கும் ஜெயலலிதா இன்று ஓட்டுக்காக ஆதாயம் தேடி தனி ஈழம் பெற இந்திய ராணுவத்தை அனுப்பி தனி ஈழம் அமைப்பேன் என்பது முற்றிலும் மோசடித்தனமான பேச்சு.வருகின்ற 11 ந்தேதிக்கு பிறகு ஈழத்தை பற்றி ஜெயலலிதா பேசவே மாட்டார் என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இலங்கை முல்லைத்தீவில் இலங்கை ராணுவம் சுற்றி வளைத்து 11/2 லட்சம் ஈழத் தமிழர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். உணவு, உடை, மருந்து மற்றும் இருப் பிடம் இல்லாமல் கொடூரமான முறையில் அல்லலுக்கு ஆட்பட்டு வருகிறார்கள். இந்திய ராணுவத்தை அனுப்பி தனி ஈழம் பெற்றுத் தருவேன் என்று ஜெயலலிதா கூறியது பற்றி கேட்டதற்கு தேர்தலுக்காக எதையும் எப்படியும் பேசுவார் ஜெயலலிதா என்பதற்கு இது சான்று. தனி ஈழத்திற்கு நேர் எதிரான கொள்கைகளை உடையவர் ஜெயலலிதா. புலிகளை பயங்கரவாதிகள் என்றும் புலிகளின் தலைவர் பிரபா கரனை இந்தியாவுக்கு கொண்டு வந்து தண்டிக்க வேண்டும் என்றும் பேசியவர் ஜெயலலிதா. தேர்தல் நேரத் தில் வாக்குசேகரிக்க தற்போது தனி ஈழம் பற்றி பேசுகிறார். புலிகளை பற்றி தற்போதைய அவர்களின் நிலை என்ன என்பது பற்றி முதலில் விளக்க வேண்டும்.
இன்றும் புலிகளை பயங்கர வாதிகள் என்று கூறுகிறாரா? போராளிகள் என்று கூறு கிறாரா என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும். ராஜ பக்சேவின் குரலை பிரதி பலிக்கும் ஜெயலலிதா இன்று ஓட்டுக்காக ஆதாயம் தேடி தனி ஈழம் பெற இந்திய ராணுவத்தை அனுப்பி தனி ஈழம் அமைப்பேன் என்பது முற்றிலும் மோசடித்தனமான பேச்சு.வருகின்ற 11 ந்தேதிக்கு பிறகு ஈழத்தை பற்றி ஜெய லலிதா பேசவே மாட்டார்.எனவே ஜெயலலிதாவின் மாய் மால ஜாலங்களில் தமிழக மக்கள் ஏமாறக்கூடாது என்று கூறினார்.
தமிழகத்தில் தி.மு.க.வின் வெற்றிவாய்ப்பு பற்றி கேட்டதற்கு தி.மு.க.வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும்,ஈழத்தமிழர் பிரச்சினையை பயன்படுத்தி எப்படியாவது வெற்றி பெற்று விடலாம் என்று இல்லாதது பொல்லாதது எல்லாம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தனக்கே எதிரான கருத்துக்களை சொல்லி வருகி றார். ஆனால் அவருடைய கூட்டணி கட்சியினர் அடிக் கடி தங்களுடைய நிலைப் பாடுகளை மாற்றி கொள்ளக் கூடியவர்கள் என்ற உண்மை மக்களுக்கு தெரிந்துள்ளதால் யாரும் நம்ப தயாராக இல்லை.எனவே இத்தகைய அவதூறு பிரசாரங்களை தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பை பாதிப்படை வைக்க முடியாது என்றார்.