புலிகளின் பிடியில் இருந்து இதுவரை 1,88,535 மக்கள் அரச கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளதாகவும் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் வழித்துணையுடன் 12,393 பொதுமக்கள் கப்பல் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு பிரமுகர்களின் விஜயம் குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கும் மாநாடு நேற்று (30.04.2009) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெறும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இங்குள்ள மக்களின் தேவைகளை அரசாங்கம் நிறைவேற்றி வருகிறது. இடம் பெயாந்து வந்தமக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதோடு மேலும் பல முகாம்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.