விடுவிக் கப்படாத பகுதியில் எஞ்சியிருக்கும் மக்களை வெளியேறுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த வேண்டு கோளடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வான் மார்க்கமாக மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. “புலிகளின் நடவடிக்கைகள் காரணமாக நீங்கள் தொடர்ச்சியான இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளதுடன், நீங்கள் மனிதக் கேடயங்களாகவும் வைக்கப்பட்டுள்ளீர்கள். எனவே, உங்கள் பாதுகாப்புக்காக அங்கிருந்து வெளியேறி வாருங்கள்” என ஜனாதிபதி விடுத்தவேண்டுகோள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் வான் மார்க்கமாக வீசப்பட்டுள்ளன.