யுத்த நிறுத்தம் செய்யவுமில்லை, செய்யப் போவதுமில்லை: மஹிந்த

mahinda-rajapaksha.jpgபிரித்தானிய பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர்களுடன் இலங்கை ஜனாதிபதி தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புடன் யுத்த நிறுத்தமெதிலும் ஈடுபடப்போவதில்லையென்று இன்று மீண்டுமொருமுறை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியாகக் கூறியுள்ளார்.

இலங்கையிலுள்ள அனைத்து சமூகத்தினரையும் பாதுகாக்கும் பொறுப்பு வெளிநாட்டினரை விட தமக்கும் தனது அரசுக்கும் அதிகமாகவே இருப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தான் யுத்த நிறுத்த உடன்படிக்கை செய்துகொள்ளவும் இல்லை என்றும் தற்போது யுத்த நிறுத்தத்துக்கு செல்லவும் முடியாது என்றும் எம்பிலிப்பிட்டியவில் இடம் பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் பொய்ப் பிரச்சாரத்தை நம்பாமல், நடுநிலையாக நின்று களநிலைமைகளை ஆராய்வது அனைவரது கடமையுமாகும் என்றும் இலங்கையின் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். புதன்கிழமையன்று பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் மற்றும் பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் பெர்ணார்ட் குஷ்ணர் ஆகியோரின் ஒரு நாள் இலங்கை விஜயத்தின் பிறகு மஹிந்த அவர்களின் இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • Kusumo
    Kusumo

    மகிந்தா உம்இனத்தையே வெட்டி வெட்டி 72ல் செகவேராக்களை ஆத்தில் போட்ட நீர் எம்மை எப்படி விடுவிர். நீர் நிறுத்தினாலும் போர் தொடரும். புலிகள் போரை நிறுத்தி சரணடைந்தாலும் நீர் போரைத் தொடர்விர் என்பது எமக்குத் தெரியும். நீர் ஒரு போர்பிரியன் என்பது எல்லோருக்கும் தெரியும்

    Reply