இலங்கையுடனான உறவை துண்டிக்கமாட்டோம் உயிர்ப்பலி வாங்காத ஆயுதமே வழங்கியுள்ளோம் – அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவிப்பு

pranabl.jpg“இந்தியாவின் நிலை என்ன என்பதை இலங்கை அரசாங்கத்திடம் தெரிவித்துவிட்டோம்.இதற்கான பதிலை மத்திய அரசு எதிர்பார்த்து காத்திருக்கிறது’ என்று வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

இலங்கை விவகாரம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது; இலங்கையில் தற்போது சண்டை வலுத்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து இலங்கை அரசாங்கத்திடம் தெளிவாக தெரிவிக்கப்பட்டுவிட்டது. அதற்கான பதிலை இலங்கை அரசிடம் இருந்து இந்தியா எதிர்பார்த்து காத்து இருக்கிறது. இலங்கை அரசாங்கம் அளிக்கப்போகும் பதிலை வைத்துத்தான் அடுத்த கட்ட நடவடிக்கையை இந்தியா மேற்கொள்ளும்.இலங்கையுடனான உறவுகளை துண்டித்துக்கொள்ளும் திட்டமெல்லாம் இந்தியாவிடம் இல்லை. இந்தியாவின் நட்பு நாடுதான் இலங்கை.அந்நாட்டுடன் சுமுக உறவு எப்போதும் இருந்து வருகிறது. எனவே உயிர்ப்பலி வாங்காத ஆயுதங்களைத்தான் அந்நாட்டிற்கு இந்தியா வழங்கியுள்ளது.அங்குள்ள அப்பாவி மக்கள் காப்பாற்றப்பட வேண்டுமென்றே இந்தியா வலியுறுத்துகிறது. புலிகள் அமைப்பு என்பது ஒரு தீவிரவாத அமைப்பு.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • Thirumalai vasan
    Thirumalai vasan

    அதென்ன ஆயுதத்தில் உயிர்ப்பலி வாங்காத ஆயுதம்? இந்திய அரசியல் தலைவர்களில் ரிட்டையர்ட் ஆசாமிகளை வீட்டக்கனுப்பிவிடவேண்டும். அங்கொருவர் வோக்கிங் போற வேகத்தில் ஞாபகம் தப்பி அதிகாலையில் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்குகிறார். பசித்ததும்> இலங்கையில் யுத்தநிறுத்தம் வந்துவிட்டதென்று வீட்டுக்குப் போகிறார். இங்கு இவர் உயிர்ப்பலி வாங்காத ஆயுதம் பற்றி கதை விடுகிறார். இந்தியாவின் பங்களிப்பைப்பற்றித்தான் இராணுவத் தலைவர்கள் இலங்கையில் புட்டுப் புட்டு வைக்கிறார்களே.

    Reply
  • kumanan
    kumanan

    இலங்கைப் போரில் இந்தியாவின் பங்கு குறித்து “தேசம்” தொடர்ந்தும் செய்திகள் பிரசுரித்து வருகின்றது. “தூங்குபவனை எழுப்பலாம். ஆனால் தூங்குவது போல் நடிப்பவனை எழுப்பமுடியாது” என்பார்கள். உண்மையிலே இந்தியா பற்றி அறியாதவர்கள் இந்த செய்திகளைப் படித்து இந்தியாவின் சுயரூபத்தை இனங்கண்டு கொள்வார்கள். ஆனால் தங்கள் சுய நலங்களுக்காக இந்திய விசுவாசிகளாக இருப்போருக்கு “தேசம்” எத்தனை செய்திகளை வெளியிட்டாலும் அவர்களுக்கு புரிய வைக்க முடியாது. அவர்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதே ஒரே வழியாகும்.

    Reply
  • msri
    msri

    உங்களின் உயிர்ப்பலி வாங்காத ஆயுதம்> அலாவுதீன் அற்புத விளக்குப் போன்றதோ? உந்த “அற்புத” ஆயதங்களால்தான் >6000ற்கு மேற்பட்ட மக்கள மடிந்திருக்கினறார்கள்! முகர்சி எல்லோருக்கும் காதிலை பூ வைக்கிறார்!

    Reply
  • மாயா
    மாயா

    முன்னர் இலங்கை, இந்தியாவை வலைக்குள் மாட்ட வைக்க பேசியது.
    இப்ப நிலமை வெற்றி பாதையை நோக்கி…….இப்ப இந்தியா, எங்களாலதான் இந்த வெற்றி இலங்கைக்கு என்று கலரை தூக்கிக் காட்டுகிறது. ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் சளைத்தவர்களில்லை.

    Reply