மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் மீள் குடியேற்றப்பணிகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. முசலி பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந 125 குடும்பங்கள்; இன்று முதற்கட்டமாக தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்கின்றன. இவ்வாறு மீளக்குடியேறும் மக்களின் சேதமடைந்திருக்கும் வீடுகளைத் திருத்துவதற்கும் புனரமைப்பதற்குமான நிதியினை அரசாங்கம் வழங்கியுள்ளது.
இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் அப்பகுதியில் புதைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகளின் காரணமாக தாமதமடைந்து வந்தன.
இப்பகுதியில் கண்ணிவெடியகற்றும் பணிகள் இந்தியா, அவுஸ்திரேலியா, சுவீடன் போன்ற பல்வேறு நாடுகளின் நிதி மற்றும் நிபுனர்களின் உதவியோடு மேற்கொள்ளப்பட்டுள்ளதையடுத்தே இப்பிரதேசத்தில் மீள் குடியேற்றம் இன்று முதல் ஆரம்பமாகின்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.