அம்பாறை மாவட்டம் பாணமை மீனவர் கிராமத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் நேற்று இனத்தெரியாதோரினால் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
கொலை செய்யப்பட்டுள்ள ஐவரது சடலங்களும் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை உகந்தமலை கடற்கரை பகுதியில் வைத்து பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பாணமை மீனவர் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி, பொன்னுத்துரை, கதிரவேல், உதயா, ஜீவா ஆகிய ஐந்து மீனவர்களே கொலை செய்யப்பட்டிருப்பதாக பொத்து வில் பொலிஸார் கூறுகின்றனர்.
சனிக்கிழமை இரவு மீன் பிடிப்பதற்காக நான்கு இயந்திரப் படகில் உகந்தமலை சென்றிருந்த மேற்படி ஐவருமே இனந் தெரியாதோரினால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள அதேவேளை, அவர்கள் பயணித்திருந்த நான்கு படகுகளும் சம்பவ இடத்திற்கு அருகிலிருந்த குடிசை வீடு ஒன்றும் எரியூட்டப்பட்டிருந்ததாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. கொலையுண்டவர் களை அவர்களது பெற்றோர், உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர். பொத்து வில் நீதிமன்ற நீதிபதியின் மரணவிசார ணைகளைத் தொடர்ந்து சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவிருப்பதாக பொலிஸார் நேற்றுத் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக பொத்துவில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.