இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் நடைபெறும் போரை முடிவுக்கு கொண்டுவரும் தனது முயற்சிகளின் காரணமாக பொதுமக்களுக்கு சொல்லொணா துயரங்களை இலங்கை அரசு ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இலங்கை அரசின் நடவடிக்கைகள் குறித்து முழு உலகமும் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் அவர் கூறுகிறார். இதனிடையே மோதல் நடக்கும் பகுதியிலிருந்து வெளியேறும் பொதுமக்களுக்கு மேம்பட்ட வசதிகளை ஏற்படுத்த வழி செய்யும் நோக்கில் ஒரு குழுவை இந்த வாரத்தின் பிற்பகுதியில் இலங்கைக்கு அனுப்பவுள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.
பிரிட்டனிலிருந்து செல்லவுள்ள பல்கட்சி குழுவினரை தற்போது வரவேற்க இலங்கை அரசு தயாராக இருக்கும் என தாம் நம்புவதாக பிரித்தானியப் பிரதமர் கார்டன் பிரவுண் தெரிவித்துள்ளார். பிரித்தானியப் பிரதமரின் இலங்கைக்கான சிறப்பு பிரதிநிதி நியமனத்தை இலங்கை அரசு முன்னர் நராகரித்திருந்தது.