கொற்றனின் கோட்டைக்குள்… : சபா நாவலன்

IDP_Camp_Barbed_Wireகுருதியுறைந்து போகாத ஒரு குக்கிராமம். பிணக்குவியல்களும் மணற்குவியல்களுமாமகக் காட்சிதரும் கடற்கரைப் பகுதி. நாளை பொழுது புலர்ந்தால் இன்னும் ஆயிரமாயிரம் பிணக்குவியல்களின் மேல் புலிகளை அழித்துவிட்டதாகப் பெருமைகொள்ளக் காத்திருக்கும் சிறீலங்கா அரசின் கோரத்தாண்டவம். ஏழு சதுர கிலோ மீற்ரர் புதுக்குடியிருப்புக் கரையோரப் பகுதிக்குள் முடக்கப்பட்டுவிட்ட இன்னமும் கொல்லப்படாத மனிதர்களின் தொகை கூட யாருக்கும் தெரியாது. தமிழ் பேசும் மக்கள் என்ற ஒரே காரணத்திற்காக  எத்தனை பிணங்களின் மேலும் புலிகள் அழிக்கப்படலாம் என்று பெருமைப் பட்டுக்கொள்ளும் மகிந்த குடும்ப அரசாங்கம். கண்மூடித்தனமான கொலைவெறிக்கு  அப்பாவித்தனமாக ஆதரவளிக்கும்  சிங்கள மக்கள். “இவர்கள் புலிகளோடு பத்து வருடங்களாக வாழ்ந்தவர்கள். முட்கம்பி முகாம்களை விட்டு வெளிவிட்டால் ஆபத்து” என்று பிரித்தானியத் தொலைக்காட்சிக்கு செவ்வி வழங்கும்  இராணுவ அதிகாரி. இவற்றையெல்லாம் கண்டும் கேட்டும் கையாலாகது திகைத்து நிற்கும் இன்னொரு கூட்டம்.

கொல்லப்படுதலை நிறுத்த நாம் யார்க்கும் பலமில்லை. அழுவதற்குக் கூடக் கண்ணீரில்லை. ஆனால் செத்துப் போகாமல் தப்பிவரும் அப்பாவிகளின் எதிர்காலமென்ன என்றாவது சிந்திக்க மறுக்கிறோம். இழப்பதற்க்கு உயிரைத் தவிர இல்லாமல் போன சமூகத்தின் எதிர்காலம் கூட மரணத்துள் வாழ்தலோ என சிறீலங்காவில் வளரும் பாசிசம் சந்தேகம் கொள்ளவைக்கிறது.

மனிதர்கள் கருத்துக்களால் பிழவுபட பாசிசம் கோரமாய் தனது விஷ வேர்களை ஊன்றி விருட்சமாய் வளர்கிறது.

1. பேரினவாத அரசாங்கம் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களின் உயிரையோ, அடிப்படை உரிமைகளையோ மதிப்பதில்லை. இதற்கெதிராகப் போராட்டம் நடத்துவது புலிகள். ஆக, புலிகள் தான் மக்களின் காப்பாளர்கள் என்கிறது மிகப்பெரும் பகுதியான தமிழ் பேசும் மக்கள் பகுதி.

2. புலிகள் தான் தமிழ் பேசும் மக்களை “முன்னேற்றமடைய விடாமல்” குண்டுகளையும் துப்பாக்கிகளையும்  தூக்கிக்கொண்டலைகிறார்கள். இதற்கெதிராக அரசாங்கம் போராடுகிறது. ஆக இலங்கை அரசின் ஆதாரவாளர்களாக வரித்துக்கொண்டு புலிகளை அழித்தலே பிரதானமான செயற்பாடாகக்கொண்டு இலங்கை அரசிற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் மிகச்சிறிய கூட்டம்.

இதில் முதலாவது பகுதியினரான பெருந்திரளான புலம் பெயர் தமிழர்களும் அவர்களின் உணர்வு பூர்வமான எழுச்சிகளையும், பங்களிப்பையும் தமது சொந்த அபிலாசைகளுக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் நபர்களும் அடங்குவர். இலங்கை முழுவதிலுமுள்ள தமிழ் பேசும் மக்கள் மத்தியிலும், குறிப்பாக வடபகுதி மக்கள் மத்தியிலும் இவ்வாறான புலிகளுக்கான மறுதலையான ஆதரவு உள்ளது என்ற கசப்பான உண்மையை யாரும் மறுக்க முடியாது. 

உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்படுத்திய வாழ்க்கைச் சுமையின் தாக்கத்திற்கு மத்தியிலும் கொட்டும் மழையிலும், கொடிய பனியிலும், தொலை தூரங்களிலிருந்துகூட அரசிற்கெதிராகப் புலி ஆதரவாளர்களால் ஒழுங்கு செய்யப்படும் நிகழ்வுகளில் பங்குகொள்ளும் பெருந்திரளான மக்களின் உணர்வுகளை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. இவர்களின் பெரும் பகுதியானவர்களிடம் புலிகள் தொடர்பாக விமர்சனப் பார்வை இருந்த போதிலும், அரசிற்கெதிராகப் புலிகளைத் தவிர எந்த மாற்று சக்தியும் இல்லாத நிலையிலேயே புலிகளின் தமது சொந்த உறவுகளுக்காக  எதிர்ப்பிடங்களில் பங்கு கொள்கிறார்கள்.

இவ்வாறான புலிகளுக்கெதிரான மாற்று வழி கருத்தியல் ரீதியாக உருவாவதை மழுங்கடிப்பதில் பிரதான பாத்திரம் வகித்தவர்கள் இரண்டாவது பகுதியினரான அரச சார்பு குழுக்களே. அடிப்படையில், புலிகளை விமர்சித்தல் என்பது, இனப் படுகொலையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் அரசை ஆதரித்தல் என்ற கருத்தை உருவாக்கியதில் பிரதான பாத்திரத்தை வகித்தவர்களும் இந்த அரச ஆதரவுக் குழுக்களே.

இவ்வாறு புலி ஆதரவு என்பது அரச பாசிசத்தையும், அரச ஆதரவு என்பது புலிகளின் பாசிசத்தையும் வளர்த்தெடுத்த போக்கில் உருவான இன்னொரு போக்கும் இந்த இரு பகுதியினரின் கருத்தியலில் வளர்ச்சியின்றி முடங்கிப் போனது. அந்த மூன்றாவது அணுகுமுறை என்பது ஐந்து வருடங்களுக்கும் மேலாக அரச ஆதரவுக்குழுக்களின் அபாயகரமான போக்கை எச்சரித்திருந்தது.

3. இலங்கை அரசிற்கெதிரான போராட்டமென்பது, சில சமூக விரோதிகளால் முன்னெடுக்கப்பட்ட குற்றச்செயல்களல்ல, மாறாக இலங்கை அரசின் தொடர்ச்சியான தேசிய இன அடக்குமுறைகெதிரான எழுற்சியேயாகும். இவ்வடக்குமுறையின் இன்னொரு உச்ச வடிவம் தான் இன்றைய இன அழிப்பும் கூட. இந்த இனச் சுத்திகரிப்பிற்கெதிரான போராட்டத்தை புலிகள் தம்மைச்சுற்றிய பாசிசமாக வளர்த்தெடுத்து சீரழித்துக் கொண்டிருக்கின்றனர். ஆக, இலங்கை அரசிற்கெதிராகப் போராடுவதற்கான உரிமையை கோரிப் புலிகளை நோக்கிய போராட்டத்தையும், பிரதான எதிரியான இலங்கை அரசிடம் சரணடையாத விட்டுக்கொடுப்பிற்கு அப்பாலான போராட்டம் அவசியம் என்பதை வலியுறுத்தியது இந்த மூன்றாவது கருத்தியல்.

கெரில்லாப் போராட்ட அமைப்புக்களை நிர்மூலமாக்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, உலகெங்கிலும் முன்னதாகப் பலதடவைகள் பிரயோகிக்கப்பட அதே தந்திரோபாயத்தை இலங்கை அரசும் தமிழ்பேசும் மக்கள் மீதும் பிரயோகிக்கும் இன்றைய வன்னிச் சூழலானது, இந்த மூன்றாவது போக்கைக் கொண்டோரையும் ஒன்றில் முதலாவது போக்கிற்கு ஆதரவு நிலை கொண்டதாகவோ அல்லது இரண்டாவது போக்கின் சார்புனிலை கொண்டதாகவோ மாற்றியுள்ளது.

போராட்டங்களை அழித்தல்…

கிரேக்கத்தில் நடந்த சோவியத் சார்புக் கம்யூனிஸ்ட் கட்சியை அழித்தொழிக்க பிரித்தானிய அமரிக்க அரசுக்கள் பயன் படுத்திய அதே தந்திரோபாயத்தையே இலங்கை அரசும் மிக வலுவான இனவாத இராணுவத்தின் துணைகொண்டு தமிழ் மக்கள் மீது பிரயோகிகின்றது. 1946 முதல் 1946 – 1948 காலப்பகுதில் கிரேக்கக் கம்யூனிஸ்ட் கட்சியின் இராணுவம் பெரிய நிலப்பரப்பினைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. சுமார் ஒரு ரில்லியன் பவுண்ட்கள் வரை செலவுசெய்தும் போராட்ட அமைப்பை அழித்தொழிக்க முடியாமல் பின்வாங்கிய பிரித்தானிய அரசிற்குப் பின்னதாக, கம்யூனிஸ்ட்டுக்களை அழிக்க அமரிக்கா முன்வந்தது.

போராளிகளால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு உணவு மற்றும் நீர் வினியோகத்தைக் கட்டுப்படுத்துமாறு ஆணையிட்ட அமரிக்க உளவுப்படையான  சி.ஐ.ஏ, அப்பகுதியிலுள்ள மக்கள்  மீது  தேசிய இராணுவமான அரச படைகள் தாக்குதல் நடத்தவும் உறுதுணையாக அமைந்தது.

சோவித் சார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் போராளிகளின் இராணுவம் நிலைகொண்டிருந்த கிராமங்கள் சுற்றி வளைக்கப்பட்டன. மக்களைப் பட்டினி போட்டுக் கொன்று குவித்தது அரச படைகள். இதன் விளைவாக போராளிகளின் கட்டுப்பாட்டிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தப்பியோடிய மக்களை சுட்டிக்காட்டி போராளிகளுக்கெதிராக கிரேக்க அரசு உலகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டது. போராளிகள் தனிமைப்பட்டுத்தப்பட்டு அழிக்கப்பபடும் நிலையில் வெளியேறும் மக்கள் மீது வன்முறை பிரயோகிக்க ஆரம்பித்தனர்.  இவ்வாறு  போராளிகளுக்கும் மக்களுக்குமிடையே முரண்பாடு வளர்ச்சியடைய, இதுவரை போராட்டத்திற்கு ஆதரவளித்த பெரும்பாலான விவசாயிகள் அதற்கு எதிரானவர்களாக மாற, அரச படைகள் வெற்றிகொண்டன. போராட்டம் அழிக்கப்பட்டது.

இந்த வெற்றியினூடாக இரண்டு பிரதான விடயங்களைச் சாதித்துவிட்டதாக பின்னதாக சி.ஐ.ஏ அதிகாரிகள் ஆவணமொன்றில் குறிப்பிடுகின்றனர்.
1. சோவியத் ஆதிக்கத்திற்கெதிரான வெற்றி.
2. மக்களுக்குப் போராட்டத்தின் மீதான நிரந்தரப் பயவுணர்வும் வெறுப்பும்.

மகிந்த அரசின் நிக்ழ்ச்சி நிரல்…

இவ்வாறு நீண்டதாகத் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலானது, பல நாடுகளில் போராட்டங்களும் புரட்சியும்  அழிவின் மறுவடிவம் என்ற சிந்தனைப் போக்கினை மக்கள் மத்தியில் விதைத்துள்ளது.

இங்கு குறிப்பிடத்தக்க இன்னொரு விடயம், சோவியத் கமியூனிஸ்ட் கட்சியின் போராட்டமானது மக்கள் சார்ந்த மக்களில் தங்கியிருக்கும் மக்களின் கண்காணிப்பிலான போராட்டமாகவன்றி, இராணுவ நோக்கிலான போராட்டமாக அமைந்திருந்ததே அரச படைகளின் அழிப்பிற்கு உட்படக்கூடியதான நிலைக்கு மாற்றப்பட்டதன் அடிப்படைக் காரணமாகும்.

போராட்டங்களையும் புரட்சிகளையும் அழித்து தாம் விரும்பிய அதிகாரத்தை நிறுவிக்கொள்ள உலகெங்கும் ஏகாதிபத்தியங்கள் கையாண்ட அதே வகைமுறையைத் தான் பேரினவாத மகிந்த குடும்பமும், அனைத்து ஏகாதிபத்திய வல்லசுகளின் மௌனமான அங்கீகாரத்துடன் கையாள்கின்றது.

அழிந்துபோகும் போராட்ட நியாயம்…

புலிகளின் போராட்டம் என்பது தவறான அடித்தளத்திலிருந்து முன்னெடுக்கப்பட்டது என்பதை போராட்டம் ஆரம்பித்த காலம்முதலே பல ஜனநாயகவாதிகளும், இடதுசாரிகளும் சுட்டிக்காட்டத் தவறியதில்லை. புலிகளின் தவறு என்பது போராட்டத்திற்கான நியாயத்தையே மழுங்கடிக்குமளவிற்குப் பாசிசமாக வளர்ந்து இன்று அரச குண்டுகளினதும் துப்பாக்கிகளினதும் வீச்சுக்குள் மக்களை நிறுத்தி தம்மைப் பாதுகாத்துக் கொள்ளுகின்ற மனித அவலமாக விசுவரூபமெடுத்துள்ளது என்பதை யாரும் மறுக்கவில்லை.

மகிந்த குடும்ப பாசிசமானது, தனது சொந்த தேசத்தின் மக்களை கிரேகத்திலும் கொரியாவிலும் அமரிக்க அரசு திட்டமிட்டது போலவே கிராமங்களுக்குள் முடக்கி, அவர்கள் மீது கொலைவெறியாட்டம் நடத்துகிறது. இதனால் புலிகளைத் தனிமைப்படுத்து, ஏற்கனவே மக்கள் மீது எந்தப் பற்றுமறுமற்ற புலிகளை மக்களுக்கெதிரான தாக்குதலில் ஈடுபடும்படியான புறச் சூழலை ஏற்படுத்தியது. புலிகளின் பிரதேசங்களிலிருந்து வெளியேறிய மக்களை சுட்டிக்காட்டி தேசிய விடுதலைப் போராட்டம் என்பது மக்கள் விரும்பாத புலிகள் என்ற குழுவின் போராட்டம் என்ற பிரச்சாரத்தை மேற்கொள்கிறது.

1. இலங்கையில் தேசிய இனப்பிரச்சனை என்பது இல்லாதவொன்றென்றும், புலிகள் மட்டுமே மக்களின் பிரச்சனை என்பதை நிறுவ முற்படுகிறது.
2. புலிகளைக் காரணமாக முன்வைத்துத்  தமிழ்ப்பேசும் மக்கள் மத்தியிலிருந்து மட்டுமல்ல, சிங்கள மக்கள் மத்தியிலிருந்தும் முன்னெழக்க்கூடிய அனைத்துப் போராட்டங்களையும் அழித்தொழிப்பது.
3. போராட்டங்கள் மீதான மக்களின் வெறுப்புணர்வை சமூகத்தின் நினைவு மட்டத்தில் வளர்த்தெடுப்பது.
4. புலிகளை முன்வைத்து ஜனநாயக சக்திகள் உட்பட அரச எதிர்ப்பாளர்களையும் தவிர்க்கமுடியாமல் அரசின் பாசிச எல்லைக்குள் உள்ளாக்குதல்.

இனவழிப்பு நடவடிக்கையே…!

உலகெங்கிலும் போராட்டங்களை நிர்மூலமாக்கவும், அதன் மீதான வெறுப்புணர்வை உருவாக்கவும் கையாளப்பட்ட அதே தந்திரோபாயத்தைத்தான் இலன்கையரசும் பிரயோகிக்கின்றது என்பது ஒருபுறமும் மறுபுறத்தில் இலங்கையரசானது ஏனைய அனைத்து ஒடுக்குமுறைகளினதும் உச்ச வடிவமாக அமைகிறது என்பது அதன் இனப்படுகொலையூடாக நிரூபிக்கிறது.

தான் விரும்பும் ஒன்றை அடைவதற்காக ஒரு நாட்டின் சட்டரீதியான அரசு நிராயுத பாணீகளான ஒரு குறித்த மக்கள் பிரிவினர் மீது இன்னொரு மக்கள் பிரிவினரின் நலனை அடிப்படையாக முன்வைத்து நடாத்துகின்ற கொலைகளும், சூறையாடல்களும் அழிவுகளும் இனப்படுகொலை என்பதை வரையறுக்கப் போதுமான முன்நிபந்தனையாகும்.

புலிகளை அழித்தல் என்ற அரசின் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள, தமிழ்பேசும் மக்கள் என்ற ஒரே காரணத்திற்காக, அம்மக்களின் அழிவைப் பொருட்படுத்தாது, அவர்களைச் சாரிசாரியாகக் கொன்றொழித்தும், அந்தக் கொலைக்களத்திலிருந்து தப்பியோடியவர்களை மிருகங்கள் போல முட்கம்பிச் சிறைகளில் அடைத்தும் பெரும்பான்மைச் சிங்களமக்களின் ஆதரவோடு நடாத்தும் இந்த அரசியலை இனவழிப்பு நடவடிக்கையே!

இன்னொரு தடவை தமிழ் மக்கள் தமது கடற்பிரதேசத்தில் மீன்பிடிக்கவோ, தனது நிலத்தில் விவசாயம் செய்யவோ, ஏன் வாழவோ உரிமை கேட்கும் போதெல்லம் தான் விரும்பியதை அடைவதற்காக இதே அரசாங்கம்  ஏதாவது ஒரு காரணத்தை முன்வைத்துத் தமிழ் மக்கள் மீது அவர்கள் தமிழர்கள் என்பதற்காக படுகொலை நடத்தும் தார்மீக உரிமையை இலங்கை அரசு இன்றைய இனப்படுகொலைகளூடாக அறிவித்திருகிறது.

போராட்டத்தின் அவசியம்…

1970 களிலிருந்து தொடர்ச்சியாக ஆட்சிக்குவந்த இனவாத அரசுகளுக்கெதிராக பல்வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்பட்ட தமிழ்பேசும் மக்களின் போராட்டமானது 1980 களின் பின்னர் தேசிய இன அடக்குமுறையின்  உச்சனிலை கண்டு ஆயுதப்போராட்டமாக பரிணாமமடைந்தது.

இன்று இந்தத் தேசிய இன அடக்குமுறை என்பது சிங்கள அரச பாசிசத்தின் அங்கீகாரத்தோடு இனப்படுகொலை என்ற நிலைக்கு வந்தடைந்துள்ளது. இந்த அரசியற் பின்புலத்தில் சிறீலங்கா அரச பாசிசத்திற்கெதிரானதும், இனப்படுகொலைக் கெதிரானதுமான  தமிழ் பேசும் மக்களது போராட்டத்தின் தேவை முநிறுத்தப்பட வேண்டும். அனைத்து ஜனநாயக முற்போக்கு சக்திகளும் இணைந்து அரசிற்கெதிரான இப் போராட்டத்தை வளர்தெடுக்க வேண்டும். போராட்டத்தின் மீதான பயவுணர்வையும் வெறுப்புணர்வையும் மக்கள்மத்தியில் விதைத்து சரணடைவைக் கோரும் சிறிலங்கா அரச பாசிசத்தையும் அதன் ஆதாரமாக அமையும் அனைத்து சக்திகளையும் முன்னைய தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு அம்பலப்படுத்தவேண்டும். பல உணர்வுபூர்வமான தேசபக்த சக்திகளை உள்ளடக்கிய புலிகளின் ஆதரவுத் தளமானது சரியான போராட்டத்தை நோக்கி வென்றெடுக்கப்ப்பட வேண்டும்.

அரச பாசிசம்…

லசங்க விக்கிரமதுங்க என்ற ஊடகவியலாளன்  அரசை நோக்கிக் கேள்வியெழுப்பிய ஒரே காரணத்திற்காக தெருக்கோடியில் வைத்துக் கொல்லப்பட்டார். சர்வதேச ஊடகங்களிலும் அறியப்பட்ட, மிகப்பலமான தொடர்புகளைக் கொண்ட ஒரு ஊடகவியலாளன் நடுத்தெருவில் வைத்து அரச காடையர்களால் தேசபக்தியின் பேரால், போரின் பேரால் கொல்லப்பட்ட சில நாட்களில் மகிந்த குடும்பத்தின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய  ராஜபக்ஷ அவர் கொல்லப்பட்டதை யாரும் கண்டுகொள்ளவில்லை என்று சர்வதேச ஊடகங்களுக்க்ச் செவ்வி வழங்குகிறார். 70 இற்கும் மேலான ஊடகவியலாளர்கள் அதிலும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் அன்னிய தேசங்களில் தஞ்சமடைந்துள்ளனர். பல ஊடகங்கள் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் தனது அனைத்து எதிரிகளையும் துவம்சம் செய்துகொண்டிருக்கிறது. அப்பாவிச் சிங்கள  மக்கள் தேசபக்தி உருவாக்கிய பாசிசத்தில் கட்டுண்டு போயுள்ளனர்.

தமிழர்களுக்கெதிரான உணர்வு தலைவிரித்தாடுவதாக அண்மையில் இங்கிலாந்துக்கு வருகை தந்திருந்த சிங்கள ஊடகவிலாளர் துயர்பட்டுக்கொண்டார். பேரூந்துகளில் சிங்கள  நடத்துனர்கள் கூட தமிழர்களிடம் அடையாள அட்டையைக் காண்பிக்குமாறு மிரட்டப்படுகின்றனர்.

தொலைதூரக் குக்கிராமங்களில் கூட சிங்கள தேசம் என்ற உணர்வும், மூன்று தேச சிங்கள உணர்வும் மகிந்த அரசை பௌத்த சிங்களத்தின் காவலனாகக் காண்பிக்கிறது. மகிந்த சிந்தனைய என்ற தேர்தல் வாக்குமூலம் இதைத்தான் முன்மொழிந்தது. ஆக, தெற்காசியாவின் கொல்லைப்புறத்தில்  ஏகாதிபத்தியங்களின் ஆசியுடன், இந்தியாவின் நேரடிப்பங்களிப்புடன், அவற்றின் வியாபார அரசியல் நலன்களுக்காக ஒரு கோரமான பாசிச அரசு உருவாகிவருகிறது.

பிரமித்துப் போன ஊடகவியலாளன்…

இவற்றிற்கெல்லம் மத்தியில், தேசிய இன ஒடுக்குமுறைகெதிராக ஆயுதப்போராட்டத்தை கோரி அரசியலுக்கு வந்தவர்களும், புலிகளிடம் போராடுவதற்கான உரிமையைக் கோரி ஜனநாயம் பேசியவர்களுமன தமிழர்கள் பலர், ஒவ்வொரு காரணங்களுக்காக சிறீலங்கா அரசின் ஆதரவு சக்திகளாக தம்மை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். அரசின் நிகழ்ச்சியொன்றைப் பிரதானப்படுத்தவில்லை என்ற புறக்கணிக்கத்தக்க காரணத்திற்காகக் கூட தெருவில் வைத்துத் தாக்கப்பட்ட ஊடகவியலாளன் வாழும் ஒரு இருண்ட தேசத்திற்கு “மக்கள்” ஊடகவியலாளன் அரச வரவேற்புடன் அரசின் கோட்டைக்குள், இனப்படுகொலையின் சூத்திரதாரிகளுள் மிக முக்கியமான ஒருவரான பசில் ராஜபக்ஷவைச் சந்தித்துவிட்டு வந்து அரசின் திறமையில் மலைத்துப் போய் தேசம்னெற் ஆசிரியரான கொன்ஸ்டன்டைன் எழுதிய கட்டுரைகண்டு அதிர்ச்சியடைந்தவர்களுள் நானும் ஒருவன்.  அவரின் அரசியல் பற்றி இதுவரை நான் அறிந்திராவிட்டாலும், மனிதாபிமான உணர்வும், குறைந்தபட்சம் கொல்லப்பட்ட சக ஊடகவிலாளர்கள் மீதான அனுதாப உணர்வும், இனப்படுகொலைகளுகெதிரான கோபமும் கொண்டிருப்பார் என்றே எண்ணியிருந்தேன்.

கொன்ஸ்ரன்ரைன் கட்டுரையில் பெருமிதம் கொள்ளும் திறந்த வெளிச் சிறைச்சாலைகளுள் வலம் வந்த அதே நேரத்தில் பவானி பெர்னாண்டோ என்ற இலங்கை வக்கீல் இந்தச் சிறைகளில் மக்கள் மந்தைகளாக நடாத்ததப்படுவதை சர்வதேச ஊடகமொன்றிற்கு விலாவாரியாகத் தெரிவித்துக் கொண்டிருந்தார். எல்லாம் போகட்டும் “ஆவணங்களே இல்லாமல்” ஏன் ஊடகவியலாளர்கள் திறந்தவெளிச் சிறை முகாம்களுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை என்றாவது ஒரு கேள்வியை கனவான் பசிலின் காதுக்குள் போட்டுவைத்திருக்கலாமே.

அரசிற்குப் பிரமித்துப் போய் நீங்கள் வரைந்த கட்டுரையைப் படிக்கும் சாதாரண புலம் பெயர் தமிழனை இது பிரமிப்பில் ஆழ்த்திவிடாது. புலிகளுக்கு எதிர் என்பதெல்லாம் அரச ஆதரவு என்று புலிகளும், தமிழ் அரச ஆதரவாளர்களும் சேர்ந்து வளர்த்தெடுத்த சூத்திரத்தை வலுப்படுத்தும், இது புலிகளின் பாசிசத்தையே வளர்த்தெடுக்கும்.

மக்கள் ஒருவிடயத்தில் தெளிவாக இருக்கிறார்கள். எமது பிரதான எதிரி சிறீலங்கா அரசு என்பதில் அவர்களுக்குக் குழப்பம் இருந்ததில்லை. ஆனால் புலிகளுக்கு எதிரான மாற்று அரசியல் அரசுக்கு எதிராக முன்வைக்கப்படும் வரை தவிர்க்க முடியாமல் அவர்கள் புலிகளையே ஆதரிப்பார்கள். ஆக, இன்றைக்கு சிறிலங்கா பாசிச அரசிற்கெதிரான போராட்டமே எமக்கு முன்னாலுள்ள பிரதான தேவை. இதற்கான அரசியலை முன்வைப்பதனூடாகவே ஜனநாயகத்தை வெற்றிகொள்ள முடியும்.!

Related Posts:

http://inioru.com/?p=2300
http://inioru.com/?p=2225

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

32 Comments

 • kural
  kural

  /ஆக இன்றைக்கு சிறிலங்கா பாசிச அரசிர்கெதிரான போராட்டமே எமக்கு முன்னாலுள்ள பிரதான தேவை. இதற்கான அரசியலை முவைப்பதனூடாகவே ஜனநாயகத்தை வெற்றிகொள்ள முடியும்.!

  அது என்ன அரசியல் என்பதையும் சொல்லியிருக்கலாமே! கட்டுரை எழுதுபவர்கள் எல்லோரும் கட்டாயம் தீர்வையும் எழுதவேண்டும் என்று அவசியமில்லைத்தான். ஆனால் நாவலன் அவர்கள் பிரச்சனைகளை மார்க்சிய கண்ணோட்டத்துடன் அணுகுவதால் தன்னுடைய பார்வையில் தீர்வையும் குறிப்பிட்டால் அது மற்றவர்கள் ஆராய்ந்து முடிவெடுக்க உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.

  Reply
 • kumar
  kumar

  வழக்கம்போல் கட்டுரையாளர் நாவலன் அவர்கள் தனது கருத்தை தெளிவாகவும் உறுதியாகவும் வைத்திருக்கிறார்.அவருக்கு என் பாராட்டுக்கள்.

  Reply
 • sarma
  sarma

  நாவலன் அவர்களே “புலிகளின் போராட்டம் என்பது தவறான அடித்தளத்திலிருந்து முன்னெடுக்கப்பட்டது என்பதை போராட்டம் ஆரம்பித்த காலம்முதலே பல ஜனநாயகவாதிகளும் இடதுசாரிகளும் சுட்டிக்காட்டத் தவறியதில்லை.”என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.இங்கு நீங்கள் கூறும் தவறான அடித்தளம் என்பது புலிகள் முன்வைத்த தமிழீழக் கோரிக்கையா? அல்லது அதற்காக அவர்கள் நடத்திய ஆயுதப் போராட்டப்பாதையா? எதை என்பதை கொஞ்சம் விளக்குவீர்களா?

  Reply
 • kathir
  kathir

  கட்டுரையாளர் புலிகள் பாசிச சக்தி என்றும் எனவே அது அழிய வேண்டும் என்கிறார்.ஆனால் அதே வேளை அவ் பாசிச சக்திகளை பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆதரிக்கின்றார்கள் என்கிறார்.ஒரு பாசிச சக்தியை பல்லாயிரக்கணக்கான மக்கள் ஏன் ஆதரிக்க வேண்டும்? அல்லது எப்படி ஆதரிக்க முடியும்?மாற்று சக்தி இல்லாததால் வேறு வழியின்றி பாசிச புலிகளை மக்கள் ஆதரிக்கிறார்கள் என கட்டுரையாளர் குறிப்பிடுவதை சரி என ஒரு வாதத்திற்கு ஏற்றுக்கொண்டால் -“அப்படியாயின் பாசிச புலிகளை ஏற்றுக்கொள்ள முடியுமாயின் அந்த மக்களால் ஏன் பாசிச அரசை ஏற்றுக்கொள்ள முடியாது” என்ற வினாவுக்கு என்ன பதிலை முன்வைக்க முடியும்?

  Reply
 • அகிலன் துரைராஜா
  அகிலன் துரைராஜா

  தன்னைத் தானே காப்பாற்ற முடியாமல் தன் உயிரைப் பாதுகாக்க மக்களைப் பலி கொடுப்பவன் மக்களின் தலைவனாம், உயிர் காத்துக் கொள்ள வெளியேறும் மக்களை சுட்டுத் தள்ளும் புலிகள் விடுதலைப் போராளிகளாம், –அகிலன் துரைராஜா நல்லூர் யாழ்ப்பாணம்

  Reply
 • mano
  mano

  கொன்ஸ்ரன்ரைன் உண்மைநிலையை நேரில் கண்ட ஒரு மனிதாபிமானி. அவரால் உண்மையை எழுத முடிந்திருக்கிறது. அவலப்படும் மக்களைப் பயன்படுத்தி ஊடகவியலாளர்களுக்கான உரிமையை நிலைநாட்டுவதோ அல்லது மகிந்த அரசிற்கெதிரான செயற்பாட்டை முன்னெடுப்பதோ அல்லது தனது அரசியல் மேதாவித்தனத்தை வெளிக்காட்டுவதோ அவரது நோக்கமாகவிருக்கவில்லை.

  கண்முன்னால் காணும் காட்சிகளை வைத்து அவரால் நடைமுறைச் சாத்தியமான விடயங்களைப் பற்றிப் பேச முடிந்திருக்கிறது. உங்கிருந்து வரட்சியான அரசியல் தத்துவங்களில் நீந்திக் குளித்தபோது இருந்த அருமையான பேச்சுகளை அந்த மக்கள் முன்னால் பேசமுடியாது வாய்மூடி மெளனமாக வெளியேறி வந்திருப்பார்.

  ‘ஆக இன்றைக்கு> சிறிலங்கா பாசிச அரசுக்கெதிரான போராட்டமே எமக்கு முன்னாலுள்ள பிரதான தேவை’ உண்மைதான் புலிப் பாசிசத்திற்கெதிரான போராட்டத்தை நடத்தியவர்கள் தான் அதையும் நடத்துவார்கள். நடத்திக்கொண்டும் இருக்கிறார்கள். நீங்கள் வர்க்கப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தயாராக இருங்கள். அப்போது இங்கே புலிப்பயமும் இருக்காது> சிங்கத்தின் பயமும் இருக்காது. நீங்கள் வந்து போராடலாம்.

  Reply
 • murugan
  murugan

  எப்படி தலையாலே கிடங்கு கிண்டினாலும் தமிழ் மக்கள் இனி அரசியலுக்கு வரமாட்டார்கள். வழமை போல் சங்கக் கடை அரிசியை வாங்கிக் கொண்டு பிள்ளைகளை இலவச பள்ளிக்கு அனுப்பிக் கொண்டு அரசாங்க ஆஸ்பத்திரியில் மருந்து எடுத்து கிடைக்கிற வேலையை செய்து கொண்டு ஒதுங்கி விடுவார்கள். எழுதுபவர்கள் எழுதட்டும் . இன்னொரு தடவை ஏமாற மாட்டார்கள். போதுமடா சாமி!

  கொத்துக் கொத்தூக மக்களை பலியெடுக்க விட்டிருக்கிற புலிகளை மக்கள் ஆதரிப்பார்கள் என்பது கடைந்தெடுத்த அரசியல் மோசடி கருத்து. தமது வரட்டுத்தன அரசியலை அரங்கேற்றத் துடிக்கும் ஈவு இரக்கமற்ற மிருகத்தனம். சுதந்திரத்திற்காக போராடியவர்களே சுதந்திரத்தை மறுத்த நிலையில் எல்லாம் மறந்து இன்னொரு இரத்த ஆறு பெருக வழிதேட அவர்கள் முட்டாள்கள் இல்லை.

  Reply
 • thampi
  thampi

  அடுத்த முறை இந்தியா செல்ல விசா நிராகரிக்கப்படலாம் என்ற நிலையிலும் அதற்கு சிறிதும் அஞ்சாது இந்திய ஏகாதிபத்தியமும் எதிர்க்கப்படவேண்டிய ஒரு எதிரிதான் என உறுதியாகவும் தெளிவாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.இலங்கை அரசை எதிர்க்கும் பலர் இந்திய அரசு விடயத்தில் அமுக்கி வாசிப்பதை நாம் எம் கண்முன்னே காண்கின்றோம். ஆனால் கட்டுரையாளர் நாவலன் அவர்கள் அவ்வாறில்லாமல் இந்திய அரசு பற்றிய தனது கருத்தை தைரியமாக முன்வைத்தமைக்காக எத்தனைமுறை வேண்டுமானாலும் பாராட்டலாம்.அவருடைய எழுத்துக்கள் தொடர்ந்தும் இந்தியாவையும் அதன் ஆதரவார்களையும் அம்பலப்படுத்துவதாக இருக்கவேண்டும் எனக்கேட்டுக் கொள்கிறேன்.

  Reply
 • anna
  anna

  அரசிடம் வாங்கும் அற்ப சலுகைகளுக்காக அரசை ஆதரிப்பவர்கள் இருக்கிறார்கள். அதேபோல் அரச சலுகைகள் தங்களுக்கு கிடைக்கவில்லையே என்ற ஆத்திரத்தில் அரசை எதிர்ப்பதாக கூறுபவர்களும் இருக்கிறார்கள்.ஆனால் இவர்கள் இரு பிரிவினரும் ஒரு இடத்தில் ஒற்றுமையாக செயற்படுகின்றனர்.அது யாராவது உண்மையாகவே அரசை எதிர்க்க வந்தால் இவர்களுக்கு பிடிப்பதில்லை. உடனே இருவரும் சேர்ந்து ஒற்றுமையாக வந்துவிடுவார்கள். இங்கு நாவலன் விடயத்திலும் அதைத்தான் நாம் காண்கின்றோம். புலிகளை எதிர்க்கும் அதே வேளையில் அரசையும் எதிர்க்கவேண்டும் என்கிறார் நாவலன். உடனே இங்குள்ள மகிந்த விசுவாசிகளுக்கு கோபம் வருகிறது. மகிந்த ராஜபக்ச என்ன மகாத்மா காந்தியா? அவரை எதிர்த்தால் இவர்களுக்கு ஏன் கோபம் வருகிறது? தமிழ்மக்களின் நலனில் இருந்து பிரச்சனையை தான் பார்ப்பதாக கட்டுரையாளர் நாவலன் குறிப்பிடுகிறார். ஆனால் இவர்களும் தாங்களும் அதே தமிழ்மக்களின் நலனில் இருந்து கூறுவதாக குறிப்பிடுகின்றனர். அடேயப்பா தமிழ்மக்கள் நலனில் உண்மையாகவே இவ்வளவு பேர் அக்கறை செலுத்துகின்றனரா? சரி இவர்கள் சொல்வதுபோல் உண்மையாகவே இவர்கள் தமிழ் மக்கள் நலனில் இருந்து கூறுவதாக இருந்தால் நாவலனின் எந்த கருத்துக்கள் தமிழ் மக்கள் நலனுக்கு எதிரானது என்பதை தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும். அதைவிடுத்து மொட்டையாக “தமிழ்மக்கள் இறந்தது போதும். அவர்கள் இன்னொரு முறை ரத்த ஆற்றில் குளிக்க தயாரில்லை” என்று உணர்ச்சி தளும்பும் வரிகளை எழுதி ஏமாற்ற வேண்டாம்.

  Reply
 • murugan
  murugan

  கொற்றனின் கோட்டைக்குள் வந்த பொது மக்களின் வாழ்வாரத்துக்கான நிவாரணப் பொருட்களை கப்பல் மூலம் அரசு தொடர்ந்து அனுப்பி வந்துள்ளது. அவ்வாறு பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களுக்காக அனுப்பப்பட்ட அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை முழுமையாகப் புலிகள் பறித்து எடுத்து அவற்றை மக்களுக்கு அதிக விலைக்கு விற்றுள்ளதாகவும் அவைகள் தங்களால் வாங்கக்கூடிய விலைக்கு அப்பாற்பட்டதாகவும் இருந்ததாக அங்கிருந்து தப்பி வந்த மக்கள் சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

  அப்படிப்பட்ட புலிகளைத் தான் மக்கள் இனியும் ஆதரிக்கப் போகின்றார்கள்!

  Reply
 • chandran.raja
  chandran.raja

  ஒரு லட்சத்தி ஐம்பதியாயிரம் மக்களை பசியும் பட்டினியிலும் சாகடித்து அவர்களுக்கு பாதுகாப்பு அரண்போட்டு அதில்தப்பி போகமுயன்றவர்களுக்கு தமது சொந்தஇனத்திலே தேர்ந்தெடுத்த மூன்று அப்பாவி தற்கொலை குண்டுதாரிகளில் குண்டைக்கட்டி வெடிக்க வைத்து தடுத்துநிறுத்த முயன்ற புலிகளை சபித்துவிட்டு, தமது இனத்து இராணுவத்தை பலிகொடுத்து எமது இனத்துமக்களை காத்து வாழ்வு கொடுத்த ஜனாதிபதி மகிந்தராஜபக்சாவுக்கு மனம் இல்லாவிட்டாலும் நுனிநாக்கிலாவது ஒரு சின்ன நன்றியை தெரிவித்து விட்டு கட்டுரையை எழுதத்தொடங்குவது தான் மனசாட்சி மனிதநேயம் கொண்டவர்களுக்கு அழகு.
  அதன் பிறகு கற்பனை குதிரையில் ஏறி புரவியை தட்டிவிட்டு கட்டுரை எழுதலாம்… சோவியத்யூனியன் சீனா பாசிசம் இனஅழிப்பு பூணை சிங்கம் புலி என வாசிப்பதற்கும் அருமை.. அருமையகாயிருக்கிறது என பின்னோட்டம் விடுவதற்கும் நிறையவே வாசகர்கள் இருக்கிறார்கள்.

  Reply
 • karththi
  karththi

  சந்திரன் உங்கள் கருத்துடன் முழுமையாக உடன்படுகிறேன்

  Reply
 • BC
  BC

  //Anna – தமிழ்மக்கள் இறந்தது போதும். அவர்கள் இன்னொரு முறை ரத்த ஆற்றில் குளிக்க தயாரில்லை” என்று உணர்ச்சி தளும்பும் வரிகளை எழுதி ஏமாற்ற வேண்டாம்.//

  உணர்ச்சி தளும்பும் வரிகளை எழுதி தமிழ் மக்களை உசுப்பேற்றி பணம் சமபாதித்தது புலிகள் தான். Murugan சொன்னது போல் சுதந்திரத்திற்காக போராடியவர்களே சுதந்திரத்தை மறுத்த நிலையில் எல்லாம் மறந்து இன்னொரு இரத்த ஆறு பெருக வழிதேட தமிழ் மக்கள் முட்டாள்கள் இல்லை.

  Reply
 • thuyaran
  thuyaran

  //கொடுத்த ஜனாதிபதி மகிந்தராஜபக்சாவுக்கு மனம் இல்லாவிட்டாலும் நுனிநாக்கிலாவது ஒரு சின்ன நன்றியை தெரிவித்து விட்டு கட்டுரையை எழுதத்தொடங்குவது தான் மனசாட்சி மனிதநேயம் கொண்டவர்களுக்கு அழகு.//-சந்திரன் ராசா
  //மகிந்தவுக்கு நாதஸ்வரக் கச்சேரி வைக்கும் இந்தப் புலத்து மக்கள் அமைப்புக்கள் புலியை அழிப்பதற்க்கு மகிந்த சொல்லும் விளக்கத்தை ஆதரிக்கும் அதேவேளை தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு எண்டதையும் ஒருக்கா சொல்லுங்கோ எண்டு கேட்கக்கூட மனமில்லாதது எதற்காக. ஒரு வேளை 95 வீதத்திற்கும் மேலானவர்கள் (இந்த அமைப்புக்களில் இருப்பவர்கள்) வன்னி அல்லாதோர் என்றபடியினால் வன்னி மக்களை அழிக்க ஏதேனும் அவையின்ர மொழியிலேயே ஹிடின் அஜெண்டா ஏதேனும் வைத்திருக்கினமோ?//-ஈழ மாறான்
  //இன்று வன்னி மண்ணில் சிறிலங்கா அரசு நடத்திக் கொண்டிருப்பது யுத்தம் அல்ல. தமிழ் மக்களை கூண்டோடு முடித்துக் கட்ட மகிந்த சிந்தனை போட்டிருக்கும் இந்திய சிந்தனைக்கு வழிசமைத்துக் கொடுத்திருக்கும் ஒரு இன அழிப்பின் முதல் அத்தியாயம்.//-ஈழ மாறன்

  Reply
 • ajeevan
  ajeevan

  கொன்ஸ்ரன்ரைன் எழுதிய கட்டுரையில் இருந்த சாரம் கூட சபா. நாவலனின் கொற்றனின் குகைக்குள் இல்லை என்பதை கட்டுரையை படிக்கும் எவராலும் புரிந்து கொள்ள முடியும்.

  எதற்கோ காத்திருந்த கொக்கு போல புலிகள் வீழும் வரை இருந்துவிட்டு மீண்டும் கமியூனிசம் அழிந்து போயுள்ள நிலையில் பாமரர் புரியாத பாசிசம் என்ற வார்த்தைகளோடு மற்றொரு மக்கள் அழிவுக்கு ஒரு சிலர் பாய் விரிக்கிறார்கள் என்பது நன்றாகவே தெரிகிறது.

  இன்னொரு அழிவை தாங்க அங்கு தமிழர்கள் இனியும் இல்லை. சிங்கள மக்கள் மட்டுமே அங்கு வாழ வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மீண்டும் சேகுவாராக்களாக களம் இறங்குங்கள்.

  சிங்கள சேகுவாராக்களே (ஜேவீபீ) உடைந்து போய் நீங்கள் சொல்லும் பாசிசத்தின் காலடியில் தவம் இருக்கும் போது உயிராவது பிழைத்தால் போதும் என்று ஓடிவந்திருக்கும் அவர்களை உங்கள் அரசியல் தவத்தைக் கலைக்க பலி பீடத்தில் வைக்காதீர்கள்.

  உலகத்தின் கவனம் தமிழர் பக்கம் திரும்ப புலிகளின் பங்கு இல்லை என்று யாரும் மறுக்க முடியாது. புலம் பெயர் நாடுகளில் அவர்களது போராட்டத் தன்மை தவறே தவிர, அவர்களது உணர்வுகளில் முயற்சிகளில் உலகம் தமிழரது குறையை அறிந்து தமிழருக்கு ஒரு நிரந்தரத் தீர்வு தேவை என்பதை உணர்ந்து பேசத் தொடங்கியுள்ளது.

  அதைப் பயன்படுத்தி உலக நாடுகளது அழுத்தங்களின் மூலம் அங்கு வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு மட்டுமல்ல அனைத்து சிறுபான்மை மக்களுக்கும் பெரும்பான்மை மக்களோடு சமமாக வாழும் உரிமையை கொடுக்க புலம்பெயர்ந்து வாழும் கல்விமான்களும் மக்களும் உலக நாடுகளின் அரசியல் தலைமைகள் ஊடாகவும் தற்போதைய ஜனாதிபதி மகிந்த அவர்கள் ஊடகவும் பெற்றெடுக்க முனைய வேண்டும்.

  இதைவிடுத்து இலங்கையில் கொற்றர்களின் கோட்டைகளை இனியும் உருவாக்கக் கூடாது.

  Reply
 • suban
  suban

  அய்யாமாரே! கிட்டத்தட்ட எல்லாம் சரி. கேம் ஓவர்.

  உந்த கருத்துக் கந்தசாமியளிட்ட ஒன்றைக் கவனிக்ககூடியதாக இருக்கிறது.
  ஒவ்வருவரும் ஒவ்வருதரை செக் வைத்தே கருத்தெழுகிறார்கள்…….

  இப்ப குறிப்பா ஆறுமாதம அல்லோலகல்லுப்பட்டு ஒருமாதிரி தற்காலிகமாக என்றாலும் ஒரு மூச்சுவிட்டுக் கொண்டிருக்கிற சனத்தைப்பற்றி கதையுங்கோ. உங்கட நீண்ட பெருங்கதையாடலையெல்லாம் கேக்க நேரமில்லை. விருப்பமில்லை. நீங்கள் வர்க்கம் மக்கள் போரட்டம் எல்லாம் கதைப்பியள். பிறகு இடைக்க ஒரு பத்து பதினைஞ்சு வரியத்துக்கு காணக்கிடையாது. உங்கட யாவாரத்துக்கு போய் பிறகு குழந்தைகுட்டியளோட றிலாக்ஸா வந்து தத்துவம் கதைப்பியள். கதையுங்கோ.

  அகதியா இருக்கிற சனத்துக்கு பிரான்னசும் லண்டனும் சேந்து ஏதோ உதவி ஓம் பிச்சைதான் போடுறதா ஒரு கேள்வி. இதை அங்க சேக்கிறதுக்கு ஒரு அழுத்தம். நாங்கள் இஞ்ச பிச்சை எடுத்தி ஒரளவுக்கெண்டாலும் வசதியா இருக்குமாப்போல அதுகளும் இருக்கட்டும். புலியள் நடத்தின புலம்பெயர் போரட்டாத்தால இப்பிடி நன்மையளாவது கிடைக்கிது.

  மற்றது உந்த வணங்காமண் பற்றி கிண்டல் பண்ணிக்கொண்டிராமல் அரைவாசிச்சனத்துக்க மேல அக்றையோட தான் அள்ளிக்குடுத்ததுகள். அதை ஏதாவது றெட்குறஸ் மாரி ஒண்டுக்கால கொண்டு சேர்க்கிற வழியபார்க்கவேணும்.

  அடுத்தது உசுப்பேத்தி விட்டாலும் உண்மையாய் நிண்டு தொண்ட கிழியக்கத்தின புலம்பெயர் இழையோரை ஆக்க சக்தியாக அணுகவேண்டும். அவர்களை குறைத்து மதிப்பீடு செய்யக்ககூடாது.

  அவவசரம் புனர்வாழ்வு. எந்த ரூபத்தில் எப்படி நடந்தாலும் ஆதரவு வழங்குவோம்.

  Reply
 • murugan
  murugan

  குருதியுறைந்து போகாத ஒரு குக்கிராமம். பிணக்குவியல்களும் மணற்குவியல்களுமாமகக் காட்சிதரும் கடற்கரைப் பகுதி. நாளை பொழுது புலர்ந்தால் இன்னும் ஆயிரமாயிரம் பிணக்குவியல்களின் மேல் என்றெல்லாம் உணர்ச்சி ததும்ப எழுதி மக்களை ஏமாற்ற வேண்டாம். குருதியுறைந்து போகாத ஒரு குக்கிராமம் ,பிணக்குவியல்கள் எல்லாம் எப்பவோ தவிர்த்திருக்க வேண்டியவை. உலக நடப்பு தெரியாமல் எங்களுக்கு கொம்பு முளைத்திருக்கு என்பது மாதிரி புலி துள்ளியதற்கு பொது மக்கள் விலை செலுத்தும் உண்மையை மறக்க வேண்டாம்.

  Reply
 • Ramasamy thasan
  Ramasamy thasan

  தமிழ் இன அழிப்பு, தனக்கு எதிரான சிங்கள மக்களையே கொல்லுதல், குடும்ப அரசியல்,ஊழல் என இலங்கையின் வரலாறு காணாத கொலைகாரனிற்கு நன்றி சொல்ல வேண்டுமாம். ஜெயவர்த்தனா, பிரேமதாச,சந்திரிகாவை விட்டு விட்டீர்கள்,அவர்களிற்கும் சொல்லியிருக்கலாம்.

  Reply
 • balasooriyan2
  balasooriyan2

  தேசம்நெற்: வன்னி மக்கள் மத்தியில் இலங்கை இராணுவம் பற்றிய அச்ச உணர்வு ஒன்று இருக்கிறது. அப்படி இருக்கையில் அச்சத்தில் வருபவர்களை இராணுவக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பொருத்தமற்றது. மேலும் இராணுவக் கட்டுப்பாட்டில் தான் சீவிக்க வேண்டும் என்பதால் பலர் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வர அச்சம்கொள்வார்கள். அதனால் அந்த முகாம்களை சர்வதேச அமைப்புகளிடம் கையளிப்பதே பொருத்தமானதாக இருக்கும் அல்லவா ?

  உயர்ஸ்தானிகர்: ஏன் நாங்கள் சர்வதேச அமைப்புகளிடம் கொடுக்க வேண்டும். அரசாங்கம் தேவையான அனைத்து விடயங்களையும் செய்கிறது.

  இது வந்து எம்மிடம் உள்ள ஒரு மூளைப் பதிவு. எங்களுக்கு எங்களுடைய மக்களைப் பார்க்கத் தெரியாதா? எங்களுக்கு எதற்கு வெளிநாட்டவர். எங்களுடைய மூளைப்பதிவில் வெள்ளைத் தோலுடையவர்கள் உயர்ந்தவர்கள் என்று நாங்கள் நினைக்கின்றோம். நோர்வே சுவீடன் டென்மார்க் பிரிட்டன் என்று நாங்கள் ஏன் இவர்களுக்கு பின் செல்ல வேண்டும். நாங்கள் எங்களுடைய மக்களை கவனிப்போம்
  http://www.bloomberg.com/apps/news?pid=20601080&sid=axAxyjPtpe7g&refer=asia

  Sri Lanka Appeals for International Emergency Aid for Refugees

  Reply
 • மாயா
  மாயா

  25 – 30 வருசத்துக்கு பிறகு திரும்பவும் வேதளம் முருங்கையில ஏறி பாசிசம் முதலளாத்துவம் கொமியூனிசம் கதைக்க வந்துட்டாங்கள். அட சோவியத் யூனியன் இல்லாமல் போய் எத்தனை வருசமாகுது. பிடல் காஸ்ரோவும் ஓபாவும் கைகாட்டுறாங்கள்.

  நீங்களும் இன்னும் புலன் இழந்த புலம் பெயர் கூட்டம்தான். சும்மா கால்மாக்ஸ் பைபிள்களை தூசு தட்டாம வச்சுப் போட்டு ஆகவேண்டியதை……..அதுதான் அந்த சனங்களுக்கு ஒரு சொட்டு தண்ணி கொடுக்கப் பாருங்கோ.

  குருதியுறைந்து போகாத ஒரு குக்கிராமம். பிணக்குவியல்களும் மணற்குவியல்களுமாமகக் காட்சிதரும் கடற்கரைப் பகுதி. நாளை பொழுது புலர்ந்தால் இன்னும் ஆயிரமாயிரம் பிணக்குவியல்களின் மேல் புலிகளை அழித்துவிட்டதாகப் பெருமைகொள்ளக் காத்திருக்கும் சிறீலங்கா அரசின் கோரத்தாண்டவம்….எண்டு போய்ப் பார்த்து எழுதினவை…..

  ““ஆவணங்களே இல்லாமல்” ஏன் ஊடகவியலாளர்கள் திறந்தவெளிச் சிறை முகாம்களுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை என்றாவது ஒரு கேள்வியை கனவான் பசிலின் காதுக்குள் போட்டுவைத்திருக்கலாமே என்றதை உங்களால் செய்ய ஏலாதோ?……என்ன மாடு ரிவர்சில போகுது?

  Reply
 • thurai
  thurai

  சிங்கள இனத்தையோ, சிங்கள அரசையோ மட்டும் குற்ரம்சாட்டி நடத்தப்படும் விடுதலைப் போராட்டமும், அரசியலும் சுயநலமிக்க, ஆதிகமோகம் கொண்டவர்களின் தனிச்சொத்துக்களேயாகும்

  ஈழத்தமிழரின் உருமைக்குரல் வாழ்வின் அடித்தளத்தில் வாழும் மக்களிடமிருந்தே ஒலிக்கவேண்டும். உலகம் முழுவதும் போடப்படும் குரல்கள் யாவும் தமிழினத்தை மேலும் மேலும் ஈழத்தில் சிங்கள்வரிற்கு அடிமையாக வாழவே வழிவகுக்கும்.

  துரை

  Reply
 • mukilvannan
  mukilvannan

  saba dont let the pepole grind you down,they whisper

  Reply
 • kathiravelu
  kathiravelu

  தம்பி கம்யூனிஸ்ட்க்களா!
  உங்களுக்கு உதாரணங்கள் எடுக்கிற தென்றால் அதெல்லாம் ரஷ்சியாவில இருந்து தான் வருமோ?உங்களுக்கு ஊருக்கு பக்கத்தில அல்லது ஊருக்குள்ளே இருந்து வராதாக்கும் நீங்கள் வீட்டில படம் வைத்திருந்தாலும் முறுக்கின மீசை ஸ்ராலின் அவரைப்பற்றி ஒரு கரை கண்டிருப்பியள் ஆனால் தமிழருக்கு ஒரு கரையை காணமட்டும் ஒருவசனம் வராது. இன்னும் சிலர் ரொக்ச்சி என்பார்கள் மாக்ஸ்ஜ வைத்து ரொக் பண்ணுவார்கள்.

  முதலில் எங்கட மக்களுக்காக சிந்தியுங்கோ குந்தைகள் பிள்ளைகள் சாப்பாடு கேட்பது கேட்குதா? உயிர்ப்பிச்சை கேட்பது கேட்குதா?

  தம்பிகளா சிந்தியுங்கள் தமிழனாய் முதலில் உங்களில் சிலருக்கு கோபம் வரும் மாக்சியத்தை இறக்கி கதைத்தால் மக்களைப் பற்றி கதைத்தால் கவனமே வராது இது தான் உங்கட மாக்சிசம் யாருக்கு தேவை ? சாப்பாடு தண்ணி முதல்ல..

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவொன்று. கட்டுரையாளர் எதுகைமோனையை ஏன் பாவிக்கின்றோமென்று தெரியாமலே எடுத்தாண்டதால் நானும் எதுகைமோனையாக ஆரம்பிக்க வேண்டியுள்ளது.

  கடந்த காலங்களில் நடந்தவற்றை தெரியாமல் இருப்பவர்களுக்கு சபா நாவலனின் கட்டுரை ஏதோ தாகத்தில் தவித்தவனுக்கு தண்ணீர் கிடைத்தது போலிருக்கும். ஆனால் கடந்த காலங்களை அறிந்தவர்களுக்கு சபா நாவலனின் புலுடாவும் புரிகின்றதே. மொத்தத்தில் புலிகளின் தவறுகளை புறந்தள்ளிவிட்டு அரசின் தவறுகளை தூக்கிப் பிடித்து மீண்டும் புலிகளை வளர்த்தெடுக்க வேண்டுமென்பதிலேயே குறியாக இருக்கின்றார்.

  புலிகளை எதிர்ப்பவர்களும் விமர்சிப்பவர்களும் அரச ஆதரவாளர் என்று எதை வைத்துக் கதையளக்கின்றார் கட்டுரையாளர். புலிகளுக்கு வக்காலத்து வாங்கவதற்காக அடுத்தவரைக் கொச்சைப்படுத்துவது கட்டுரையாளரின் பலமல்ல பலவீனமே..

  கொன்ஸ்ரன்ரைன் கட்டுரையைக் கூட எதற்காக கட்டுரையாளர் கொச்சைப்படுத்த முனைகின்றார். ஒரு சந்திப்பு நடைபெறும் போது எதிர் முனையிலிருப்பவரின் பலம், பலவீனம் இரண்டையும் எடைபோடும் திறமை சந்திப்பை நடத்தபவர்களுக்கு இருக்க வேண்டும். அந்த வகையில் கொன்ஸ்ரன்ரைன்; பசிலின் ஆளுமையையும் கேள்விகளுக்கு ஆதாரங்களுடன் பதிலளிக்கும் இலாவகத்தையும் பாராட்டியிருந்தார். அதனால் அவர் பசிலுக்கு வக்காலத்து வாங்கியதாக அர்த்தமில்லை. அப்படி ஆளுமையுடனும் திறைமையாகவும் கையாளக் கூடிய தமிழர்கள் இன்று நம்மிடையே இல்லை என்ற வேதனையின் வெளிப்பாடாகக் கூட அது இருக்கலாமல்லவா?? இதற்கு புலிகள் போட்டுத் தள்ளிய தமிழ்ப் புத்திசாலிகளும் ஒரு காரணமென்ற உண்மை உங்களுக்கு உறைக்கவே இல்லையா??

  ஒரு காலத்தில் போராட்டத்தில் தாமாக வந்திணைந்தவர்கள் பலர். ஆனால் பிற்பாடு பலாத்தகாரமாகக் கடத்தப்பட்டு இணைக்கப்பட்டவர்களே பலர். இந்த நிலையில் புலிகளுக்கு இன்றும் பேராதரவு என்று கதைவிட உங்களால் எப்படி முடிகின்றது. தாயகத்திலுள்ள ஆதரவு நிலை என்பது துப்பாக்கி முனையில் வைத்திருப்பது. புலத்திலுள்ள ஆதரவென்பது உளப்பூர்வமாக அல்ல நாமும் கச்சேரிக்கு போனோம் என்பது போல் (போகவிட்டால் துரோகிப்பட்டம் கிடைத்து விடும் என்ற அச்சத்தில்) ஆதரவு நிலை. ஒரு படத்தில் வடிவேலு ஆண்டவனைக் காட்டுகின்றேன் என்று எல்லோரிடமும் பணம் வாங்கி, அவர் குறிப்பிட்ட தினத்தில் ஆண்டவனைக் காட்டுகின்றேனென்று எல்லோரையும் அழைத்தும் செல்வார். பின் அவர் ஆகாயத்தைக் காட்டி அதோ நிற்கிறார் ஆண்டவர் என்பார். அப்போ சுற்றியிருந்தவர்கள் எமக்கத் தெரியவில்லையே என்பார்கள். அப்போது வடிவேலு ஆண்களைப் பார்த்துச் சொல்லுவார் உங்க மனைவிமார் பத்தினிகளாக இருந்தால் உங்க கண்களுக்கு ஆண்டவன் தெரிவார் அப்படி அவர்கள் பத்தினிகள் இல்லையென்றால் ஆண்டவன் தெரியமாட்டாரென்று. உடனே சுற்றியிருந்த ஆண்களனைவரும் தமக்கு ஆண்டவன் தெரிவதாகசவும் கையில் சூலாயுதம் வைத்திருப்பதாகவும் வேலாயுதம் வைத்திருப்பதாகவும் கதைவிடுவார்கள். இப்படித் தான் இன்று புலத்தில் புலிகளின் ஆதரவென்பதும். நாளை புலிகள் முழுவதும் அழிக்கப்பட்டு விட்டால் இந்த ஆதரவாளர்கள் தற்கொலை செய்து கொள்ளப் போகின்றார்களா?? அல்லது தமது அன்றாட அலுவல்களைப் பார்த்துக் கொண்டு வழமைபோல் வேலை வீடு தொலைக்காட்சியென்று காலத்தைக் கடத்துவார்களா??

  புலிகளுக்கு எத்தனையோ சந்தர்ப்பங்கள் கிடைத்தும் அதனை தங்கள் சுயநலத்திற்காக கோட்டை விட்டவர்கள் புலிகள். இறுதியாக சமாதான காலத்தில் கிடைத்த அரிய வாய்ப்பினையும் வரி என்ற பெயரில் பணம் புடுங்குவதிலேயே குறியானார்கள். தினசரி பல கோடிகளாக வருமானம் வர அதையே தொழிலாக்கி விட்டார்கள். ரணிலின் அரசும் இதன் மூலம் புலிகள் மக்களின் எதிர்ப்பை இலகுவாகச் சந்திப்பார்கள் என்ற நப்பாசையில் கண்டும் கணாமலிருந்தது. மகிந்த ஏ9 ஐ பூட்டியவுடன் தாங்க முடியாமல் அதை திறக்கச் சொல்லி குரல் கொடுப்பதிலேயே மும்மூரமாகவிருந்தனர். இதிலிருந்தே கட்டுரையாளருக்கு புரியவில்லையா பிற்காலத்தில் புலிகள் எப்படியான செயற்பாடுகளில் குறியாகவிருந்தனரென்று?? புலிகளுக்கு மக்கள் ஆதரவு உண்டடென்றால் இன்று அந்த மக்களை எதற்காக துப்பாக்கி முனையில் தடுத்து வைத்திருக்க வேண்டும்.

  இன்று மகிந்த அரசு முனைந்து நடத்தும் போரில் மக்கள் அழிகின்றார்கள் என்பது எந்தளவிற்கு உண்மையோ அந்தளவிற்கு அதற்கு புலிகளும் காரணமென்பதும் உண்மையே. மக்களுக்கான பாதுகாப்பு வலையத்தினுள் புலிகளுக்கென்ன வேலை என்பதை கட்டுரையாளர் விளக்குவாரா??

  இன்று புலிகளின் கட்டுப்பாட்டுக்குளிருந்து தப்பி வந்த மக்கள் முட்கம்பி வேலிக்களுள் முடக்கப்பட்டிருக்கின்றார்கள் என்று முதலைக் கண்ணீர் வடிப்போர் இதற்கு முன் புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருந்ததை விட சிறப்பாகவே இருக்கின்றார்கள் என்பதை ஏன் உங்களைப் போன்றவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தப்பி வந்தவர்களை பராமரித்து அவர்களை அவரவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்துவதற்கு, முதலில் சுமூகமான சூழ்நிலைகள் தோன்ற வேண்டும். அதன் பின் கண்ணிவெடிகள் அகற்ப்பட்டு அவர்களை மீள்குடியேற்றம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதற்கு அரசிற்கு போதிய அவகாசம் கொடுககப்பட வேண்டும்.

  தற்போது இலட்சக் கணக்கில் தப்பி வந்த மக்களின் பராமரிப்பை வான்படையும், இராணுவமும் சேர்ந்து செயற்பட்டுச் செய்வதை ஏன் உங்களைப் போன்றவர்களால் கண்டு கொள்ள முடியவில்லை. தமிழர்களும் தமது மக்கள் தான் என்ற ரீதியில் தானே மகிந்த அரசு அந்த மக்களுக்கான நடவடிக்கைகளையும் கையாள்கின்றது. புலிகளுக்கு உணவும் வழங்கிக் கொண்டு அவர்களுடன் போர் செய்து கொண்டிருக்கும் ஒரு அரசாகவே இன்று மகிந்த அரசு இருக்கின்றது. போர் முடிய மகிந்த அரசு தமிழ் மக்களை எப்படிக் கையாள்கின்றரது என்பதை வைத்தே அந்த அரசின் நடவடிக்கைகளை பாராட்டவோ அல்லது விமர்சிக்கவோ முடியும்.

  தற்போதைய காலக்கட்டம் உணர்த்தும் உண்மை தனிநாடென்பது என்றுமே அடைய முடியாத ஒரு கனவு. ஆனால் சிங்கள அரசுடன் பேச்சுவார்த்தை நடாத்தி உலகநாடுகளின் அழுத்தங்களுடன் ஒரு நியாயமான தீர்வை பெறக்கூடிய சாத்தியக்கூறு தற்போது நிறையவேயுள்ளது. தமிழர்கள் சரி சிங்களவர்கள் சரி நிறையவே களைத்து விட்டார்கள். இதனால் இவ்விரு இனங்களும் இன்று தமது மனநிலையில் நிறைய மாற்றங்களை உள்வாங்கத் தொடங்கி விட்டார்கள். இந்த நிலையை இன்றைய அரசும் புத்திசாலித்தனமாக நியாயமாக பாவிக்க முற்பட்டால் தீர்வு என்பது வெகு தூரத்தில் இல்லை. மகிந்த அரசிற்கு புலிகளை ஒடுக்க சிங்கள மக்கள் ஆதரவளித்தாலும் ஜேவிபி மற்றும் சிகல உறுமய போன்ற இனவாதக் கட்சிகளுக்கு பெருண்பான்மையான மக்கள் ஆதரவளிக்கவில்லையென்பதையும் நாம் பார்க்க வேண்டும்.

  மொத்த்தில் கடந்த காலத் தவறுகளை சரிசெய்து சரியான பாதையினை எம்மக்களும் முடிவு செய்து தீர்க்கமாகச் செயற்பட்டால் விடிவு வெகு தூரமில்லை. அதுவரை வெறும் விமர்சனங்களை மட்டும் வைப்பதில் பொழுதைப் போக்காமல் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளிலும் செயற்படலாமே.

  Reply
 • Makendren
  Makendren

  நாவலன் இன்னும் இரு கிழமையில் உங்கள் சகோதரங்கள் ரயர் போட்டுக் கொழுத்தப்பட்ட தினம் அதுதான் ரெலோவின் 24வது அனிவேஷரி வருகுது. அந்த சகோதர ‘இன அழிப்பை’ இன்னும் சரியெண்டுதான் புலி சொல்லுது. இன்றுவரை பாதிக்கப்பட்ட அந்த குடும்பங்களுக்கு ஒருவரும் உதவியதில்லை. உங்கள் இசங்களும் பாசிசம் பாசிசம் எங்கிற சொல்லுகளும் சாப்பாடு போட்டதா?? சரி ரெலோ அழிப்பு புலி நடத்தியபோது இப்ப எழுதின மாதிரி புலிப்பாசிசம் பற்றி எழுதினீங்களா?? எழுத விட்டிருப்பாங்களா??

  ஊடகவியலாளருக்கு நடப்பன பற்றி கதையுங்கோ. கேளுங்கோ. தப்பேயில்லை. அரசாங்கம் செய்த ஊடகவியலாளன் கொலைகளை அரசாங்கத்திடம் கேட்கவேணுமெண்டு கேட்கும் நீங்கள், புலி செய்த ஊடகவியலாளன் கொலைகளை புலியிடம் கேட்டனீங்களா? சுந்தரம் கொலை பற்றி….. புலி செய்த அந்த ஊடகவியலாளன் கொலை பற்றியும் தொடர்ந்த ஊடகவியலாளர் கொலைகளையும் பற்றி எழுதலாம்தானே. புலிகளிடமும் இவைகளைப்பற்றி கேட்டு எழுதலாம்தானே??

  Reply
 • mukilvannan
  mukilvannan

  makenndran its sad reflection on the pulical that this fact has remained undetectrd for so long

  Reply
 • accu
  accu

  தமிழகத்தில் மட்டுமல்ல புலம்பெயர் தேசங்களிலும் கோமாளிகளுக்கு பஞ்சமில்லை.

  Reply
 • balasooriyan2
  balasooriyan2

  பார்த்திபன் we not ltte Supporters
  but u say
  தப்பி வந்தவர்களை பராமரித்து அவர்களை அவரவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்துவதற்கு, முதலில் சுமூகமான சூழ்நிலைகள் தோன்ற வேண்டும். அதன் பின் கண்ணிவெடிகள் அகற்ப்பட்டு அவர்களை மீள்குடியேற்றம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதற்கு அரசிற்கு போதிய அவகாசம் கொடுககப்பட வேண்டும்.
  wait @ see

  Reply
 • balasooriyan2
  balasooriyan2

  This is the desperate plight of the cowardly war enforced by LTTE & SL govt. We cannot / we have no access to asses the mental state of these people. We do not know how many of their loved ones are still on the battle front. Only psychopaths can make a slide show like this and assume that everything is fine now. It is true that many deranged personalities went to liberate the Tamil people. These so called liberators should take responsibility for the plight of these and the plights of the many thousands in refugee camps in Sri Lanka, India, etc……

  In India, refugees in camps are living under miserable conditions for over 2 decades. What have the so called Diaspora done? Those who have built their lives in secure developed countries using the ethnic problem (which has caused tremendous blood shed, loss of life and disruption to lives of helpless innocent Tamil lives ) that they themselves fuelled have to stop making comments on the emotions of these suffering people.

  The war has given prominence to many anti social elements among the Tamils. As long as ethic grievances are not met, these elements will be in the front line and make sadistic judgements. Why did many of the so called liberation fighters leave India to claim asylum in developed countries when disputes arose with their leadership instead of surrendering to the SL Govt?

  Reply
 • murugan
  murugan

  புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும்பத்துடன் புதுமாத்தளன் யுத்த சூனியப் பிரதேசத்தில் இருந்து வெளியேறுவதை கண்டு இடைமறித்த புலிகள் அக்குடும்பம் அங்கிருந்து வெளியேற முற்பட்டதற்குத் தண்டனையாக அச் சிறுவனது இரு கால்களையும் கோடாரிகொண்டு குடும்பத்தினர் முன்நிலையில் வெட்டி துண்டாடினர். குற்றுயிராக விழுந்து கிடக்கும் அச்சிறுவனைச் சுற்றி நின்று குடும்பத்தினரும், வன்னியில் உள்ள மக்களும் ஓலமிடுகின்றனர். அங்கு விரைந்த மனிதாபிமான பணியாளர்கள் அச்சிறுவனுக்கு சிகிச்கையளிக்க முற்படுகின்றனர். ஆனால் அவர்களது முயற்சி பலனளிக்காமல் அவனது உயிர் அனைவர் முன்னிலையிலும் பிரிகின்றது.

  இந்தப் புலிகளையா தமிழ் மக்கள் தொடர்ந்து ஆதரிக்கப் போகின்றார்கள்.! அப்படி என்ன அவர்களுக்கு ஒரு தமிழ் ஈழம் தேவையா? மனநோய் பிடித்தவர்களே இதை சொல்லுவார்கள்.

  Reply
 • thevi
  thevi

  புலிகளின் பிடியிலிருந்து 48 மணி நேரத்தில் ஒரு இலட்சத்து 2 ஆயிரம் பொதுமக்கள் தப்பி வந்துள்ளார்கள். எஞ்சியுள்ள மக்களும் அடுத்துவரும் சில தினங்களுக்குள் விடுவிக்கப்படுவர், இப்போது புலிகளும் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பிலேயே இருக்கின்றனர். இல்லாவிட்டால் அவர்கள் அரசு அறிவித்த பாதுகாப்பு வலயத்தில் இருந்திருக்க மாட்டார்கள்”– அமைச்சர் ரம்புக்கெல.

  Reply
 • மாயா
  மாயா

  புலிகளில் இருப்போரும் ஆதரவாளர்களும் மதங்களின் பேரால் ஒன்றாக இறந்த சில செக்ட்களையும் விட மோசமான மன நோயாளிகள். இது முடிவுக்கு வர காலம் எடுக்கும். புலத்தில் இறந்தவர்களை வைத்து உழைக்க ஒரு புலிக் கூட்டம் ரெடியாகவே இருக்காம்.

  Reply