![]()
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரும் மக்களின் நலன்கருதி கடற்படையினர் பல நடவடிகைகளை மேற்கொண்டு வருவதாகக் கடற்படை பேச்சாளர் டி.கே.பி. தஸாநாயக்க இன்று பாதுகாப்பு அமைச்சகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த இரு நாட்களில் கடற்படையினரிடம் 5000க்கு மேற்பட்ட மக்கள் தஞ்சமடைந்துள்ளனர். இவ்வாறு தஞ்சமடையும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல எமக்கு ஆறு மணிநேரம் தேவைப்பட்டது. கடல் வழியாகத் தப்பி வரும் மக்களில் காயமடைந்தவர்களின் நலன் கருதி மருத்துவ மற்றும் உணவு உட்பட அத்தியாவசிய வசதிகள் புல்மோட்டை கடற்தளத்தில் செய்யப்பட்டுள்ளன. விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்படும் எந்தத் தாக்குதலையும் எதிர்க்கக் கூடிய வகையில் கடற்படையினர் தயாரான நிலையலேயே உள்ளனர்” என்றார்
பார்த்திபன்
நன்றி உங்கள் சேவைகளுக்கு. இதன் மூலம் நீண்ட காலப் பாதிப்பிற்குள்ளான அந்த மக்களின் மனங்களை வெல்லுங்கள். அதன் மூலம் தான் இனி இலங்கையில் ஒரு புதிய பரிணாமத்தைக் கட்டி எழுப்பலாம்.